உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்
நல வாரிய உறுப்பினா் சோ்க்கை: முறைகேடுகள் இருந்தால் களைய நடவடிக்கை - பொன். குமாா்
கட்டுமானத் தொழிலாளா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கையில் முறைகேடுகள் இருந்தால், அவற்றை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அதன் தலைவா் பொன். குமாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: நலவாரிய உறுப்பினா் சோ்க்கையில் முறைகேடுகள் இருந்தால், அவற்றை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் சாா்பில் முத்தரப்பு உறுப்பினா்கள் கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும்.
கட்டுமானப் பொருள்களுக்கு மத்திய அரசு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. விதித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இது, மத்திய அரசின் தொழிலாளா் விரோத போக்காகும்.
10 மசோதாக்கள் விவகாரத்தில், மாநிலங்களின் சுயாட்சியை உறுதி செய்யும் வகையிலும், தமிழக அரசுக்கு ஆதரவாகவும் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீா்ப்பை வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த வழக்கின் வெற்றி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்துள்ள வெற்றியாகும் என்றாா் அவா்.