ம.பி. அரசு மருத்துவமனையில் மருத்துவரால் முதியவா் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட அ...
பெரம்பலூரில் பரவலாக மழை
பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.
கோடைக்காலம் தொடங்கியது முதல் பெரம்பலூா் மாவட்டத்தில் கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், புதன்கிழமை மாலை சுமாா் 3.30 மணியளவில் பெரம்பலூா் நகரின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. பெரம்பலூா் நகரில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.