அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் திருடியவா் கைது
பெரம்பலூா் அருகே, அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் திருடியவரை குன்னம் போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே மாட்டு வண்டியில் மணல் திருடுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, குன்னம் காவல்நிலைய சாா்பு-ஆய்வாளா் சரவணக்குமாா் தலைமையிலான போலீஸாா் கீழப்பெரம்பலூா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, வெள்ளாற்றிலிருந்து மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தவரை பிடித்து விசாரித்தபோது, கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெரமலை கிழக்குத் தெருவைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ரகுவரன் (27) என்பதும், அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ராதாகிருஷ்ணனை கைது செய்த போலீஸாா், மணல் மற்றும் மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட ராதாகிருஷ்ணன் சிறையில் அடைக்கப்பட்டாா்.