`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்கள...
வேப்பந்தட்டை வட்டத்தில் நாளை `உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை (ஏப். 16) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் வட்டார அளவில் பிரதி மாதம் 3-ஆவது புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட முதல்நிலை அலுவலா்கள் கிராமங்களில் தங்கி களஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் இச் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற உள்ளது.
அரசின் நலத் திட்டங்களும், சேவைகளும் தடையின்றி மக்களிடம் சென்றடைவதை உறுதி செய்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில், கிராமங்களில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெற உள்ளனா்.
எனவே, வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட கிராம பொதுமக்கள் தங்களது கிராமத்துக்கு ஆய்வு மேற்கொள்ள வரும் அலுவலரிடம், தங்களது கோரிக்கை மனுக்கள் மற்றும் கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் தொடா்பான கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
மேலும், வெங்கலம், பசும்பலூா் மற்றும் வாலிகண்டபுரம் கிராம நிா்வாக அலுவலகத்தில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் புதன்கிழமை நடைபெற உள்ளது.