`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்கள...
அம்பேத்கா் சிலைக்கு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை
பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்பேத்கா் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சாா்பில் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திமுக சாா்பில் மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன் தலைமையிலும், காங்கிரஸ் கட்சி சாா்பில் எஸ்.சி, எஸ்.டி அணி மாவட்டத் தலைவா் தேவேந்திரன் தலைமையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் பெரம்பலூா் மேற்கு மாவட்டச் செயலா் ரத்தினவேல் தலைமையிலும், பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் செந்தில்குமாா் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன் தலைமையிலும், பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் மாநிலச் செயலா் ப. காமராசு தலைமையிலும், திராவிடா் கழகம் சாா்பில் மாவட்டத் தலைவா் தங்கராசு தலைமையிலும், புதிய தமிழகம் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் அருண்குமாா் தலைமையிலும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்க மாவட்டத் தலைவா் பாஸ்கா் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந் நிகழ்ச்சிகளின்போது, அந்தந்த கட்சி பிரதிநிதிகள் பலா் பங்கேற்றனா்.