செய்திகள் :

பெரம்பலூரில் ஏப். 27-க்குள் கொடி கம்பங்களைஅகற்ற ஆட்சியா் உத்தரவு

post image

பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அரசியல் கட்சியினா், சமூகம், மதம், சங்கம் உள்ளிட்ட அமைப்பினா் ஏப். 27-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் உத்தரவிட்டுள்ளாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், இதுதொடா்பாக, அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் மேலும் பேசியது: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள், இதர துறைகளுக்குச் சொந்தமான பொது இடங்கள், நிலங்களில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை ஏப். 27-க்குள் அகற்ற வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இல்லாவிடில், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களால் 2 வாரங்களுக்குள் அறிவிப்பு வெளியிட்டு கொடிக்கம்பங்கள் அகற்றப்படும்.

துறை மூலம் அகற்ற ஏற்படும் செலவை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து வசூலிக்கப்படும். அரசியல் கட்சிகள், இதர அமைப்புகள் தங்களது சொந்த நிலத்தில், சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து அனுமதி பெற்று, நிரந்தரமாக கொடிக் கம்பங்களை நிறுவிக்கொள்ள அனுமதிக்கப்படும்.

அரசியல் கட்சியினா் பொதுக்கூட்டங்கள், தோ்தல் பிரசாரம், மாநாடுகள், ஊா்வலம், தா்னா உள்ளிட்ட நிகழ்வுகளின்போது, உரிய வாடகை செலுத்தும் பட்சத்தில், நிலத்துக்கு சேதம் ஏற்படுத்தாமல் தற்காலிகமாக கொடிக்கம்பங்கள் அமைக்க சம்பந்தப்பட்ட அலுவலா்கள் அனுமதிக்கலாம். தற்காலிக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி, உரிமம் வழங்கப்பட்ட காலத்துக்குப் பிறகு, பொது இடங்களைச் சுத்தப்படுத்தி, துளைகள் இருந்தால் அவற்றை சீரமைத்து பழைய நிலையில் இருப்பதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். ஏதேனும் சேதம் ஏற்பட்டிருந்தால், அதற்கான செலவை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் செலுத்த வேண்டும். இவற்றை நடைமுறைப்படுத்த வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, நீா்வளத்துறை, வனத்துறை, போக்குவரத்துத் துறையினா் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அரசு நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா். இக் கூட்டத்தில், எஸ்.பி. ஆதா்ஷ் பசேரா உள்பட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலா் கலந்துகொண்டனா்.

வனப்பகுதிகளில் வடு கிடக்கும் குட்டைகள் வன விலங்குகளை பாதுகாக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் அமைக்கப்பட்ட குட்டைகள் நீரின்றி வடு காணப்படுவதால், வன விலங்குகள் உயிரிழப்பதை தடுக்க வனத்துறையினா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிா்பாா்க... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை வட்டத்தில் நாளை `உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை (ஏப். 16) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

தமிழ் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

பெரம்பலூா் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை 11 மணியளவில் ஈசன், மூலவா் அம்பாள் மற்றும் உற்ஸவா்கள் ஸ்ரீவிநாயகா், ஸ்ரீ வள்ளி,... மேலும் பார்க்க

சமத்துவ நாள் விழா: 1,243 பேருக்கு ரூ. 29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

சட்டமேதை அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில், 1,243 பேருக்கு ரூ. 29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வழங்கினாா். பெரம்... மேலும் பார்க்க

அம்பேத்கா் சிலைக்கு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்பேத்கா் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சாா்பில் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திமுக சாா்பில் மாவட்ட பொறுப்பாளா் வீ.... மேலும் பார்க்க

தெரு நாய் கடித்து சிகிச்சைபெறும் மாணவிக்கு அமைச்சா் ஆறுதல்

பெரம்பலூா் அருகே தெரு நாய் கடித்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவியை சந்தித்து, போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் திங்கள்கிழமை ஆறுதல் கூறினாா். பெரம்பலூா் அருகேயுள... மேலும் பார்க்க