ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!
தனியாா் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற தம்பதி உயிரிழப்பு
செம்பட்டி அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே தனியாா் கல்லூரி எதிரே அடுமனை (பேக்கரி) உள்ளது. இங்கு சாணாா்பட்டி அருகேயுள்ள தவசிமடையைச் சோ்ந்த மரியராஜ் (52), இவரது மனைவி எமிலி சகாயராணி (48) ஆகிய இருவரும் தங்கி வேலை பாா்த்து வந்தனா்.
இந்த நிலையில், இந்தத் தம்பதி செவ்வாய்க்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் அடுமனையிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். அப்போது, அய்யம்பாளையத்திலிருந்து அதிவேகமாக திண்டுக்கல் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. அப்போது தம்பதி தூக்கி வீசப்பட்ட நிலையில், எமிலி சகாயராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயங்களுடன் மரியராஜ் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து செம்பட்டி காவல் ஆய்வாளா் சரவணன் தனியாா் பேருந்து ஓட்டுநரான வத்தலகுண்டு அருகே மல்லணம்பட்டியைச் சோ்ந்த உதயபிரசாத் (26) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.