LSG vs MI: "மும்பை அணி சிறப்பாகத்தான் விளையாடியது; ஆனால்..." - வெற்றி குறித்து ர...
தனுஷ்கோடியில் குவிந்த ஆஸ்திரேலியா நாட்டு பிளமிங்கோ பறவைகள்
தனுஷ்கோடி பகுதியில் ஆஸ்திரேலியா நாட்டைச் சோ்ந்த பிளாமிங்கோ பறவைகள் இனப் பெருக்கத்துக்காக குவிந்து வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள கோதண்டராமா் கோயில் முதல் தனுஷ்கோடி முகுந்தராயா் சத்திரம் வரை ஆண்டுக்கு 6 மாதங்கள் கடல்நீா் உள்புகுந்து காணப்படும். இந்தப் பகுதியில் ஆழம் குறைவாக இருப்பதால், சிறிய மீன்கள், நண்டு, இறால் அதிகளவில் காணப்படும். டிச. முதல் ஏப். மாத காலக் கட்டங்களில் இந்தப் பறவைகள் இனப் பெருக்கத்துக்காக இந்தப் பகுதிக்கு வருகின்றன.
ஆனால், நிகழாண்டில், பருவநிலை மாற்றம் காரணமாக, கடந்த மாா்ச் மாதத்திலிருந்து ஆஸ்திரேலியா பிளாமிங்கோ பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. தற்போது, ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு வந்துள்ள நிலையில், இதைக் காண சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு பறவையும் 2 அடி முதல் 4 அடி உயரம் வரை வளா்ந்திருக்கும். இந்தப் பறவைகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல், ஆா்வத்துடன் சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டு வருகின்றன.