தனுஷ் இயக்கத்தில் அஜித்?
நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்கும் முயற்சியில் நடிகர் தனுஷ் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் அரிதாகவே உச்ச நட்சத்திரங்களின் கூட்டணி இணைகிறது. பெரும்பாலும் ஒரே படத்தில் சம அளவுள்ள கதாபாத்திரங்களில் நடிப்பார்கள்; இல்லையென்றால் சிறப்புத் தோற்றத்தில் நட்புக்காக வந்து செல்வார்கள்.
தற்போது, சினிமா வட்டாரத்தில் புதிய தகவல் ஒன்று சுற்றிக்கொண்டிருக்கிறது. நடிகர் அஜித்திடம் நடிகர் தனுஷ் கதை ஒன்றை சொன்னதாகவும் அது அஜித்துக்குப் பிடித்துபோக மேற்கொண்டு கதையை விரிவாக்கம் செய்யும் பணியில் தனுஷ் ஈடுபட்டு வருகிறாராம்.
இதையும் படிக்க: தள்ளிப்போகும் இட்லி கடை?
சில ஆண்டுகளாகவே நடிப்பதைவிடவும் தனுஷுக்கு படத்தை இயக்குவதிலும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை என கடந்த 2 ஆண்டுகளில் 3 படங்களை அடுத்தடுத்து இயக்கி ஆச்சரியப்படுத்தினார்.
தற்போது, அஜித்துக்கு கதை சொன்னதாகக் கூறப்படும் தகவல் உண்மையானால் இப்படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகும்.
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் தனுஷின் இட்லி கடை திரைப்படமும் ஏப். 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.