செய்திகள் :

தனுஷ் கால்ஷீட் விவகாரம்: "பெற்ற முன் பணத்திற்கு நடித்துத் தருவதே நியாயம்'' - Fivestar பட நிறுவனம்

post image

நடிகர் தனுஷ் ஃபைவ் ஸ்டார் கிர்யேஷன்ஸ் பட நிறுவனத்தில் அட்வான்ஸ் பணத்தைப் பெற்றுக் கொண்டு படத்தில் நடிப்பதற்குத் தேதி கொடுக்காமல் இருக்கிறார் எனச் சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சை வெடித்திருந்தது.

இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை இந்த விவகாரம் தொடர்பாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் சில கேள்விகளை முன்வைத்து அறிக்கை ஒன்றை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் கலைச்செல்வி வெளியிட்டிருந்தார்.

rk selvamani

இதற்குப் பதிலளிக்கும் வகையில் நேற்றைய தினம் பெப்சி தலைவரும், திரைப்பட இயக்குநருமான ஆர்.கே. செல்வமணி பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இன்றைய தினம் மீண்டும் ஆர்.கே.செல்வமணிக்குப் பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரார் கலைச் செல்வி.

அந்த அறிக்கையில் அவர், ``நடிகர் சங்க உறுப்பினர்கள் வட்டிக்கு கடன் வாங்க அதற்கென வேறு அமைப்புகள் உள்ள போது தயாரிப்பாளர்களை ஏன் நாடவேண்டும்...

தாங்கள் கூறுவது போல் கடன் பெற்றவர்களிடம் நான் கூற முடியாது, வந்து நடித்து தருமாறு தங்கள் நண்பர் திரு.கதிரேசன் முதலில் வேண்டுகோள் வைத்து மன்றாடி நின்றது அனைவரும் மறந்துவிட்டீர்களா?

பெற்ற முன் பணத்திற்கு நடித்து தருவதே நியாயம் என்று எந்த சங்கத் தலைமைகளுக்கும் தெரியவில்லையா?

நடிகர் திரு.தனுஷ் அவர்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதுக்கு Five Star Creations மட்டும் முதல் காரணம் அல்ல என்று தங்களுக்குத் தெரியாதா? என்ன நடந்தது என்று ஆராய்ந்து பார்த்தால் உண்மை தெரியவரும். புதிய அரசியலைப் புகுத்தும் நோக்கம் என்னுடையது அல்ல.

எங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கவே சபையில் நடந்ததைச் கூறினேன். சகோதரி என்று தொடங்கிய தங்கள் கடிதம் இறுதியில் மிரட்டும் பாணியிலே உள்ளது.

அன்று சபையில் நடந்ததும் இதுவே. ஒரு பிரச்னையைப் பேசும் இடத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் அனைத்து பிரச்னைகளையும் இழுத்து வந்து தயாரிப்பாளர்களைத் திசை திருப்பும் நோக்கம் யாருடையது என்று தெரியவில்லையா.

எங்கள் நிறுவனம் பெறும் தீர்ப்பு, அனைத்து முன்பணம் கொடுத்து காத்திருக்கும் தயாரிப்பாளர்களுக்குமானது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Dhanush: ``தனுஷ் -ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் விவகாரம்.. பிரச்னை இதுதான்'' - ஆர்.கே.செல்வமணி ஓபன் டாக்

நடிகர் தனுஷ் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் பட நிறுவனத்தில் அட்வான்ஸ் பணத்தைப் பெற்றுக் கொண்டு படத்தில் நடிப்பதற்குத் தேதி கொடுக்காமல் இருக்கிறார் எனச் சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சை வெடித்திருந்தது.இந்த வ... மேலும் பார்க்க

`அவர் சொல்வது முற்றிலும் தவறு' - பெப்சியை தாண்டி புதிய அமைப்பை உருவாக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு

தனுஷ் - ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்கு இடையேயான கால்ஷிட் விவகாரம்தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஆர்.கே.செல்வமணிக்கு பலக் கேள்விகளை முன்வைத்து அறிக்கை ஒன்றை... மேலும் பார்க்க

"ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று சொன்ன திருமூலர்தான் முதல் கம்யூனிஸ்ட்" - சமுத்திரக்கனி

மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிசிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் சமுத்திரக்கனி கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களைப் பேசியிருக்கிறார்.மேடையில் பேசிய அவர், ''கல்லூரி முடித்துச் ச... மேலும் பார்க்க