செய்திகள் :

தன்பாலின ஈர்ப்பாளர்கள் இருவருக்கு பிரம்படி தண்டனை!

post image

இந்தோனேசியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்களாக உள்ள இரு ஆண்களுக்கு 85 பிரம்படிகள் தண்டனை விதித்து ஷரியத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள பண்டா அச்சே நகரில் 24 மற்றும் 18 வயதான இரு கல்லூரி மாணவர்கள் தனியே வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளனர். அந்தப் பகுதி வாசிகளுக்கு இருவரின் மீதும் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து மாணவர்கள் இருவரும் தனியே அவர்களது அறையில் ஒன்றாக இருந்தபோது கதவினை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது ஆடையின்றி இருந்த அவர்கள் இருவரையும் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், அவர்கள் இருவரும் தன்பாலின ஈர்ப்பில் ஈடுபட்டது சட்டரீதியாக நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் 85 மற்றும் 80 பிரம்படிகள் வழங்குமாறு இஸ்லாமிய ஷரியத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க | வங்கதேச விமானப்படைத் தளம் மீது தாக்குதல்: ஒருவர் பலி

இதில், வயதில் மூத்த நபரே இந்த செயலுக்குக் காரணமாக இருப்பார் என நம்புவதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம் அவருக்கு 5 பிரம்படிகள் அதிகமாக வழங்கியுள்ளது.

மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் இருவரும் இந்த தண்டனையை ஏற்றுக் கொள்வதாகவும் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும் கூறியுள்ளனர்.

இந்தோனேசியாவில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் அச்சே மாகாணத்தில் மட்டும் இஸ்லாமிய ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ளது.

இந்தோனேசிய அரசு பிரிவினைவாதப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 2006-ல் அச்சே மாகாணத்திற்கு இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமல்படுத்தும் உரிமையை வழங்கியது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும், 100க்கும் மேற்பட்டோர் பொதுவில் பிரம்படியால் அடிக்கப்பட்டுள்ளனர்.

அச்சே மாகாணத்தில் வசிக்கும் முஸ்லிமல்லாத 1% மக்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும். தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு இவ்வாறு தண்டனை வழங்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

இதையும் படிக்க | அரசு ஊழியர்கள் 1,600 பேர் பணிநீக்கம்: டிரம்ப் உத்தரவு

தன்பாலின ஈர்ப்பாளர்கள் மட்டுமின்றி சூதாடுபவர்கள், மது அருந்துபவர்கள், இறுக்கமாக ஆடை அணியும் பெண்கள், திருமணத்திற்கு முன்னால் உறவு கொள்பவர்கள், வெள்ளிக்கிழமை தொழுகையைத் தவறவிடும் ஆண்கள் ஆகியோருக்கும் பிரம்படி தண்டனை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதாக கையெழுத்திட்ட சர்வதேச ஒப்பந்தங்களை இந்தோனேசியா மீறுவதாக மனித உரிமைகள் அமைப்புகள் இந்தச் சட்டத்தை விமர்சித்துள்ளன.

இந்தோனேசியாவின் தேசிய குற்றவியல் சட்டம் தன்பாலின ஈர்ப்பை அங்கீகரிக்கவில்லை. மேலும் அச்சே பகுதியில் ஷரியத் சட்டத்தை ரத்து செய்ய இந்தோனேசிய அரசுக்கு அதிகாரம் இல்லை.

போப் பிரான்சிஸுக்கு தீவிர சிகிச்சை: இப்போது எப்படி இருக்கிறார்?

ரோம் : போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து வாடிகன் தகவல் தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸ்(88) முச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் க... மேலும் பார்க்க

300 நோயாளிகளை பாலியல் வன்கொடுமை செய்த பிரான்ஸ் மருத்துவர்!

சிகிச்சைக்காக வந்த 300 பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, முன்னாள் பிரான்ஸ் அறுவைசிகிச்சை மருத்துவர் மீது வழக்குத் தொடரப்பட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.பிரான்ஸ் மருத்துவர்... மேலும் பார்க்க

காணாமல் போன மலேசிய விமானம்: 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தேடுதல் வேட்டை!

எம்ஹெச்370 மலேசிய விமானம் மர்மமான முறையில் மாயமாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் தேடுதல் வேட்டையை மலேசிய அரசு தொடங்கியுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு மா்மமான... மேலும் பார்க்க

மர்மக் காய்ச்சல்: காங்கோவில் 50-க்கும் மேற்பட்டோர் பலி!

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் வடமேற்கு பகுதியில் மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்மக் காய்ச்சல் பாதிப்பு கடந்த ஜனவரி 21 அன்று முதலில்... மேலும் பார்க்க

இந்தியாவைத் தோற்கடிப்பேன், இல்லையெனில்...! பாகிஸ்தான் பிரதமர் சூளுரை!

இந்தியாவைத் தோற்கடிப்பேன், இல்லையெனில் பெயரை மாற்றிக் கொள்வேன் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் சவால் விடுத்துள்ளார்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காசி கான் பகுதியில் நலத்திட்டப் ப... மேலும் பார்க்க

வாடிகனில் குவிந்த மக்கள்.. போப் பிரான்சிஸ் நலனுக்காக பிரார்த்தனை

வாடிகன் சிட்டி : போப் பிரான்சிஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், வாடிகன் சதுக்கத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவர் உடல் நலன் பெற வேண்டும் என்று பிரார்த்தனையில் ஈடுப... மேலும் பார்க்க