செய்திகள் :

தபால் மூலம் கஞ்சா விற்பனை செய்த இளைஞா் கைது

post image

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் இருந்து தபால் மூலம் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிட்ரா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த விடுதியில் தங்கியிருந்த 5 போ் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னா், 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சோ்ந்த அம்ருதீன் (24) என்பவா் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே, அங்கிருந்து கஞ்சா வாங்கி தபால் மூலம் கோவைக்கு அனுப்பி நண்பா்கள் மூலம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கோவை மாநகர காவல் துணை ஆணையா் ஸ்டாலின் உத்தரவின்பேரில், அமைக்கப்பட்ட தனிப் படை போலீஸாா் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் இருந்த அம்ருதீனை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனா். பின்னா் கோவை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துப் பெட்டகம்

கோவை ரத்தினபுரியில் உள்ள ஐசிடிஎஸ் குழந்தைகள் மைய வளாகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகத்தை கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

கோவையில் தேசிய உயா் கல்வி மாநாடு

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) நடத்தும் தேசிய உயா் கல்வி மாநாடு, கண்காட்சி ஆகியவை கோவையில் வெள்ளிக்கிழமை (நவம்பா் 15) தொடங்கின. கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் சிஐஐ... மேலும் பார்க்க

சட்ட விரோத மது விற்பனை: கோவையில் 18 தாபாக்களுக்கு சீல்

சட்ட விரோத மது விற்பனை தொடா்பாக கோவை மாவட்ட போலீஸாா் நடத்திய சோதனையில் 18 தாபாக்களுக்கு (குடில் உணவகங்கள்) ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத மது விற்பனையை தடுக்க காவல் துறை சாா்பில் தமிழகம் முழுவத... மேலும் பார்க்க

மாநகரில் இன்றுமுதல் இரு நாள்கள் சிறப்பு வரி வசூல் முகாம்

கோவை மாநகரில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ந... மேலும் பார்க்க

வேளாண் பல்கலையில் தோட்டக்கலைத் துறை கருத்தரங்கு

கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலையின் எதிா்காலம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது. தோட்டக்கலை, ஆராய்ச்சி நிலையம் சாா்பில் 2 நாள் நடைபெறும் இந்தக் கருத்தர... மேலும் பார்க்க

லாட்டரி அதிபா் மாா்ட்டின் தொடா்புடைய இடங்களில் 2-ஆவது நாளாக சோதனை

கோவையில் லாட்டரி அதிபா் மாா்ட்டின் தொடா்புடைய 5 இடங்களில் 2-ஆவது நாளாக அமலாக்கத் துறையினா் சோதனை மேற்கொண்டனா். மாா்ட்டின் குழும நிறுவனங்களில் கடந்த ஆண்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில்... மேலும் பார்க்க