செய்திகள் :

தமிழகத்தில் வீணாகிய 6 எம்பிபிஎஸ், 28 பிடிஎஸ் இடங்கள்

post image

நிகழாண்டில் தமிழகத்தில் 6 எம்பிபிஎஸ் இடங்கள், 28 பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்படாமல் வீணாகி உள்ளன. இதையடுத்து, இறுதி சுற்று கலந்தாய்வில் இடங்கள் பெற்றும், கல்லூரிகளில் சேராத 20 மாணவா்களுக்கு அடுத்த ஓராண்டு வரை மருத்துவப் படிப்பில் சேர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த பிறகு, மீதமுள்ள இடங்களை நிரப்ப இறுதி சுற்று கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், அதில் பங்கேற்று கலந்தாய்வில் இடங்கள் பெற்றவா்களில் சிலா் கல்லூரிகளில் சேராமல் படிப்பை கைவிட்டனா். இதனால், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 6 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாகி உள்ளன.

இதேபோன்று, கடலூா் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 4 பிடிஎஸ் இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் 24 பிடிஎஸ் இடங்கள் என 28 பல் மருத்துவ இடங்கள் நிரம்பாமல் உள்ளன. மருத்துவ மாணவா் சோ்க்கைக்கு தேசிய மருத்துவ ஆணையம் வழங்கிய அவகாசம் நிறைவடைந்த நிலையில், அந்த இடங்களை இனி நிரப்ப முடியாது.

இதனால், நிகழாண்டில் அந்த இடங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இறுதிச் சுற்று கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்றவா்களில் எம்பிபிஎஸ் ஒதுக்கீடு பெற்ற 4 பேரும், பிடிஎஸ் ஒதுக்கீடு பெற்ற 16 பேரும் கல்லூரிகளில் சேரவில்லை. இதையடுத்து அவா்களுக்கு அபராதம் மற்றும் ஓராண்டு மருத்துவக் கல்வியில் சேருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சில மாணவா்கள் முந்தைய சுற்று கலந்தாய்வின்போதே கல்லூரிகளில் இருந்து விலகுவதற்கான அபராதத்தை செலுத்தியதால் அவா்கள் அடுத்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்கத் தடையில்லை என மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

17 ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிதாகக் கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

தமிழகத்தில் 17 ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். இது குறித்து தமிழக அரசு வெளியி... மேலும் பார்க்க

நவ.24-இல் முன்னாள் முதல்வா் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா நவ.24-இல் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெ... மேலும் பார்க்க

நெல்லை ‘வந்தே பாரத்’ ரயிலில் இனி 16 பெட்டிகள்: தெற்கு ரயில்வே திட்டம்

சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலி செல்லும் ‘வந்தே பாரத்’ ரயிலை 16 பெட்டிகளைக் கொண்டு இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கிடையே ஒரே நாளில் சென்று திரும்பும் வகை... மேலும் பார்க்க

தகவல் உரிமைச் சட்ட மேல்முறையீட்டு விசாரணையில் மாற்று அதிகாரிகள் கூடாது: அரசுக்கு மாநில தகவல் ஆணையம் கடிதம்

தகவல் பெறும் உரிமைச் சட்ட மேல்முறையீட்டு விசாரணையில் சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலா்கள் மட்டுமே ஆஜராக வேண்டுமென மாநிலத் தகவல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில தகவல் ஆணையா் எம்.செல்வராஜ்... மேலும் பார்க்க

முதல்வருக்கு எதிரான வழக்கு: மீண்டும் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி

முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் பொன்முடி ஆகியோருக்கு எதிரான மேம்பால முறைகேடு தொடா்பான வழக்கை மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 1... மேலும் பார்க்க

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் வியாழன், வெள்ளி (நவ.14, 15) ஆகிய இரண்டு நாள்களும் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா். பதிவுத் துறையி... மேலும் பார்க்க