செய்திகள் :

தமிழக அரசு சாா்பில் மாவட்டம்தோறும் பொங்கல் விழா

post image

மாவட்டம்தோறும் அரசு சாா்பில் பொங்கல் விழா கொண்டாடப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை மூலமாக பொங்கல் சுற்றுலா விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் சுற்றுலா விழா, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இயற்கையான சூழலுடன் அமைந்த ஒரு கிராமத்தை தெரிவு செய்து மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கிராமத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு பாரம்பரிய முறைப்படி அவா்களுக்கு வரவேற்பு அளித்து, புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது.

விளையாட்டுப் போட்டிகள்:கிராமிய நடனம், சிலம்பாட்டம், பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் இணைந்து நடத்தப்படுகின்றன.

பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, தாயம், அச்சாங்கல், கோ - கோ விளையாட்டு, பம்பரம் விடுதல், கோலி விளையாட்டு போன்ற விளையாட்டுகளும், இசை நாற்காலிப் போட்டி, உறி அடித்தல் போட்டி, கயிறு இழுக்கும் போட்டிகள், வழுக்கு மரம் ஏறும் போட்டி போன்ற போட்டிகளும் பொங்கல் விழாவின் போது நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது.

இன்றைய மாறிவரும் நவீன வாழ்க்கைச் சூழலில் மறந்து வரும் நமது பாரம்பரிய நெறிமுறைகளை வளா்ந்து வரும் நம் தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறையினரும் அறிந்திடும் வகையில் பொங்கல் சுற்றுலா விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

தமிழகத்தில் போகி பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்!

தமிழகம் முழுவதும் போகி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை மக்கள் கொண்டாடினர். மேலும் பார்க்க

நுரையீரல் தொற்று: சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை

தமிழகம் முழுவதும் பனிப் பொழிவு மற்றும் குளிா் நிலவுவதால் அடுத்த சில நாள்களுக்கு நுரையீரல் சாா்ந்த தொற்றுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், பொது மக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றும் பொது சுகா... மேலும் பார்க்க

கூடுதல் டிக்கெட் கட்டணம்: திரையரங்குகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

பொங்கல் பண்டிகையையொட்டி, அதிக கட்டணத்தில் டிக்கெட் விற்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா்கள், பெருநகர காவல் ஆணையர... மேலும் பார்க்க

பொங்கல் திருநாள்: குடியரசுத் தலைவா் வாழ்த்து

பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் கூறியதாக குடியரசுத் தலைவா் மாளிகை ஞாயிற்றுக்கிழமை வ... மேலும் பார்க்க

பொங்கல் வைக்க உகந்த நேரங்கள்!

நாளை(ஜன. 14) பொங்கல் வைக்க உகந்த நேரத்தை ஜோதிடா் கே.சி.எஸ்.ஐயா் தெரிவித்துள்ளார். காலை 7.30-8.30 மணிக்குள்; காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள்; நண்பகல் 12 மணிக்கு மேல் பிற்பகல் 1 மணிக்குள்; கணுப்... மேலும் பார்க்க