அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும்!
தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரஸ் போராட்டம்!
நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சனைகளை விவாதிக்க வலியுறுத்தி தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதானியின் ஊழல் மோசடிகள் குறித்தும், மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக பிரதமர் மோடி நேரில் சென்று சந்திக்காதது குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து தமிழக காங்கிரஸ் இன்று(டிச. 18) போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது.
அதன்படி, சென்னை சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதானி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தியும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.