'அதே தான்' தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை! - எவ்வளவு தெரியுமா?
தமிழக பேரவையில் குமரி அனந்தனுக்கு இரங்கல் தீர்மானம்!
தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12:15 மணியளவில் காலமானார்.
இவரது மறைவுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கியவுடன், குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.
இதனைத் தொடர்ந்து, பேரவையில் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர்.