செய்திகள் :

தமிழக மின் கட்டமைப்பு நவீனமயத்துக்கு ரூ.3,246 கோடி: தில்லி மாநாட்டில் செந்தில் பாலாஜி வலியுறுத்தல்

post image

நமது நிருபர்

தமிழ்நாட்டில் மின் கட்டமைப்பு நவீனமயமாக்கலுக்காக அனுப்பப்பட்டுள்ள ரூ.3,246 கோடி திட்ட கருத்துருக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற மாநில எரிசக்தித் துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக மின் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வலியுறுத்தினார்.

மத்திய அரசின் மின்சாரம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டர் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:

கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக சுமார் ரூ.37 ஆயிரம் கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. மின் துறை நிதிச் சவால்களை கொண்டிருந்த போதிலும், தமிழ்நாட்டு மக்களுக்குத் தரமான மின்சாரத்தைக் குறைந்த விலையில் விநியோகம் செய்ய வேண்டுமென்ற மாநில அரசின் உறுதிப்பாட்டை இது எடுத்துக்காட்டுகிறது.

மின்சாரத்தின் சராசரி விற்பனை விலைக்கும் சராசரி பெறப்படும் விலைக்கும் இடையே உள்ள இடைவெளி, இந்த ஆண்டிற்கு ரூ. 0.49 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் ரூ. 1.24 என்ற அளவில் இருந்து குறைந்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் ஆண்டு வட்டிச் சுமை சுமார் ரூ. 16,000 கோடியாக இருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சிகள் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக, ஆண்டு வட்டி விகிதம் 10.5 சதவீதம் அளவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாநில மின் நிறுவனங்களின் நிதி மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதில் தமிழ்நாடு காட்டியுள்ள அர்ப்பணிப்பைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசின் நிதி நிறுவனங்களான ஆர்இசி மற்றும் பிஎஃப்சிஆகியவற்றின் வட்டி விகிதங்களை 8 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.

புதிய துணை மின் நிலையங்களை நிறுவுதல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் உள்பட மின் கட்டமைப்பு நவீனமயமாக்கலுக்காக ரூ.3,246 கோடி மதிப்பிலான திட்ட கருத்துரு மத்திய அரசின் மின்சார அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மாநிலத்தின் வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் மின் தேவைகளுக்கேற்ப விநியோக அமைப்பை வலுப்படுத்த இந்தக் கருத்துரு மீது விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இந்தியாவில் 3-ஆவது இடத்தில் தமிழகம் உள்ளது என்றார் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி.

முன்னதாக, மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டரிடம் தமிழகம் தொடர்புடைய பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்தார்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 34 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 34 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நாளை(நவ. 15) இயங்காது என அறிவிப்பு!

புதுச்சேரியில் உள்ள ஜவாஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்(ஜிப்மர்) நாளை (நவ. 15) இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15 ஆம் தேதி குருநானக் ஜெயந்தியையொட்டி மத்திய அரசு... மேலும் பார்க்க

நாளைமுதல் பணிக்கு திரும்புவோம்: அரசு மருத்துவர்கள் அறிவிப்பு!

நாளைமுதல் பணிக்கு திரும்ப முடிவெடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் செந்தில் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் இன்று (நவ.14) ஒரு நாள் அடைய... மேலும் பார்க்க

19 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புடள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல... மேலும் பார்க்க

மதுரையில் சம்பவம்: சாலையில் தலை.. உடலைத் தேடும் காவல்துறை

மதுரையில் காவல்நிலையம் அருகே சாலையில் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த தலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலையை வீசிச் சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலையிலேயே த... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள்: உதயநிதி வேண்டுகோள்

தூத்துக்குடி: குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள் என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மணமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் தங்கப்பாண்டியன் இல்ல திருமண விழா தூத்த... மேலும் பார்க்க