செய்திகள் :

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: இலங்கைக்கு மத்திய அரசு கண்டனம்

post image

புது தில்லி: எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 2 பேர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதற்கு மத்திய அரசு, இலங்கைக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டருந்த காரைக்கால் மீனவர்களை, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 13 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதில் 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். கைது செய்யப்பட்ட 13 பேரும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், எத்தகைய சூழலிலும் இந்திய மீனவர்கள் மீது தனது படை பலத்தை இலங்கை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்று மத்திய அரசு கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது.

வாழ்வாதார பிரச்னை என்பதால் மனிதாபிமான முறையில் மீனவர்கள் பிரச்னையை கையாள வேண்டும் என்றே மத்திய அரசு வலியுறுத்துகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேரை துப்பாக்கிச் சூடு நடத்தி இலங்கை கடற்படை கைது செய்த சம்பவத்தில் மீனவர்களில் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும், மூவருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

காயமடைந்த மீனவர்களை, காங்கேசம் பகுதிக்குச் சென்று இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து அவர்களது உடல்நலன் குறித்து விசாரித்துள்ளதாகவும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, தில்லியில் இலங்கை தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்புவில் உள்ள தூதரகம் வாயிலாகவும் இந்தியா தனது கண்டனத்தை இலங்கையிடம் தெரிவித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்மீது பிரதமருக்கு அதீத அன்பு: மதுரை மக்களிடையே மத்திய அமைச்சர் புகழாரம்!

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக பாராட்டு தெரிவிப்பதற்காக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் மதுரையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.மதுரை மாவட்டம் மேலூர் பக... மேலும் பார்க்க

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்த போது ரூ.1.60 கோடி ஹவாலா பணம் சிக்கியது. இதுதொடர்பாக திருச்சியைச் சேர்ந்த 4 பேரிடம் விசாரண... மேலும் பார்க்க

போராட்டம் நியாயமானது என்பதாலேயே டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து! -அண்ணாமலை

போராட்டம் நியாயமானது என்பதாலே டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த ஆண... மேலும் பார்க்க

அமித் ஷாவுக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு!

அண்ணல் அம்பேத்கரை அவதூறாகப் பேசிய அமித் ஷாவைக் கண்டித்து, தமிழக காங்கிரஸார் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தவுள்ளனர்.முன்னாள் குடியரசுத் துணைத் தலைவரும் பாஜக மூத்தத் தலைவருமான வெங்கையா நாயுடுவின் இல்லத்... மேலும் பார்க்க

தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை!

தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்க... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு வழங்குவது குறித்து பரிசீலித்து முடிவு: மேயர் பிரியா

பள்ளிகளில் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு வழங்குவது குறித்து பரிசீலித்து முடிவு செய்யப்படும் என்று சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார்.சென்னையில் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தி... மேலும் பார்க்க