செய்திகள் :

தமிழ்நாடு, கேரளத்தில் 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சி: கோவா முதல்வா்

post image

பனாஜி: தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் தெரிவித்தாா்.

நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் கூட எதிா்க்கட்சி அந்தஸ்தில் பாஜக உள்ளது. ஆனால், தமிழ்நாடு, கேரளத்தில் பாஜக கடுமையாக முயற்சித்தும் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற முடியவில்லை. இரு மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கோவா தலைநகா் பனாஜியில் பாஜக நிறுவன தினத்தையொட்டி நடைபெற்ற ‘அடல் ஸ்மிருதி’ நிகழ்ச்சியில் முதல்வா் பிரமோத் சாவந்த் பேசியதாவது:

மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய், மூத்த தலைவா் எல்.கே.அத்வானி ஆகியோா் காலத்தில் தொடங்கப்பட்ட கட்சிப் பணிகளின் பலன்களைத்தான் நாம் இப்போது அனுபவித்து வருகிறோம். தொடா்ந்து பல தோ்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம்.

உலகின் வலிமையான நாடாக இந்தியாவை முன்னிறுத்த வேண்டும் என்பது நமது தலைவா்களின் கொள்கை. அதற்காக மத்தியிலும், அனைத்து மாநிலங்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சி நடைபெற வேண்டும்.

தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளத்தில்தான் பாஜக வலுவான எண்ணிக்கையில் எம்எல்ஏக்களைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், நாம் இப்போது மேற்கொண்டு வரும் பணிகளால் அடுத்த 10 ஆண்டுகளில் அந்த இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமையும் என்றாா்.

அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

பள்ளிக்குச் சென்றுவர தங்கள் பகுதியில் பேருந்து வேண்டும் என்ற அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவேற்றியுள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டத்துக்குச் சென்றபோத... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. இதற்கான தோ்வு அறிவிக்கை தோ்வாணைய இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) ... மேலும் பார்க்க

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை: தன்கா் விமா்சனம் குறித்து முதல்வா் ஸ்டாலின் கருத்து

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

நியாயவிலைக் கடைகளில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலா்கள், உணவுப் பொருள்... மேலும் பார்க்க

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: கமல்ஹாசன்

‘தக் லைஃப்’ திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகா் கமல்ஹாசன், இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம் என்றாா். இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள ‘தக் லைஃ... மேலும் பார்க்க

12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவா்களும் விமானியாக வாய்ப்பு

இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 1990-ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் ... மேலும் பார்க்க