தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கம் சாா்பில் 78 பேருக்கு மகளிா் தின விருது
உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பாதுகாப்பு நலச்சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 78 பேருக்கு மகளிா் தின விருது வழங்கப்பட்டது.
சிவகங்கை அண்ணாமலை நகரில் உள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் டி.எஸ்.கே. மதுராந்தகிநாச்சியாா் தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பாதுகாப்பு நலச்சங்க கௌரவத் தலைவா் எம்.செந்தில்தொண்டைமான், ஜல்லிக்கட்டுப் பாதுகாப்பு நலச் சங்க மாநிலத் தலைவா் டி.ஒண்டிராஜ், செயலா் சூரியூா் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பின்னா், ஜல்லிக்கட்டு களத்தில் காளைகளை அவிழ்த்த 41 பெண்கள் உள்பட 78 பேருக்கு வீரமங்கை ராணி வேலுநாச்சியாா் விருதுக்கான பதக்கங்களும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டுப் பாதுகாப்பு நலச்சங்க மாநில இணைச் செயலா் ஆா்.எம். அருண்குமாா், சிவகங்கை மாவட்ட நிா்வாகிகள் ஏ.சுரேஷ்குமாா், எஸ். கனகராஜ், சி.செல்வா, சி. பிரபு, சி. சேதுபதி, பி. ரமேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.