செய்திகள் :

தமிழ்நாட்டிலேயே தேர்வர்களுக்கான மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்- இபிஎஸ்

post image

தமிழ்நாட்டிலேயே தேர்வர்களுக்கான மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தெற்கு ரயில்வேயில் உதவி லோகோபைலட் பணியிடங்களுக்கான 2ம் கட்டத் தேர்வு வரும் மார்ச் 19 அன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 90% தேர்வர்களுக்கு தெலங்கானா மாநிலத்தில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

1000 கி.மீ. க்கு அப்பால் சென்று தேர்வு எழுதுவது தேர்வர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கும்.

மேலும், இதுபோன்ற குளறுபடிகள் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப்பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேரவேண்டும் என்ற உந்துதலைக் குறைத்துவிடும் என்பதையும் மத்திய அரசு உணரவேண்டும்.

ஆந்திரம்: மதுபோதையில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட நபரால் பரபரப்பு!

எனவே, தேர்வர்களின் கோரிக்கையினைக் கருத்திற் கொண்டு, தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசையும், தெற்கு ரயில்வே நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பாவுவுக்கு எதிரான அதிமுக தீர்மானம் தோல்வி!

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்தது.எதிர்க்கட்சி உறுப்பினர்களை அதிக நேரம் பேச அனுமதிப்பதில்லை, தொலைக்காட்சியில் நீண்ட நேரம் தங்களது பேச்சை நேரலை ... மேலும் பார்க்க

நடுநிலையோடு செயல்படுபவர் பேரவைத் தலைவர் அப்பாவு: முதல்வர் ஸ்டாலின்

நடுநிலையோடு செயல்படுபவர் பேரவைத் தலைவர் அப்பாவு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரவைத் தலைவர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், அப்பாவு கனிவானவர... மேலும் பார்க்க

பாஜக போராட்டத்துக்கு திருமாவளவன் வரவேற்பு!

டாஸ்மாக்குக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியினர் நடத்தும் போராட்டத்தை வரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.மேலும், கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் மது ஒழிப்பு வாக்குறு... மேலும் பார்க்க

பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்: எடப்பாடி பழனிசாமி

பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.பேரவைத் தலைவருக்கு எதிரான தீர்மானத்தில் அவர் பேசுகையில், பேரவைத் தலைவர் பெரும்பாலான நேரங்களில... மேலும் பார்க்க

அப்பாவுக்கு எதிரான தீர்மானம்: காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு!

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதனிடையே, எதிர்க்கட்சிகளான பாமக, பாஜக உறுப்ப... மேலும் பார்க்க

அதிமுக தீர்மானம்: பாஜக, பாமக புறக்கணிப்பு!

அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான வாக்கெடுப்பை பாஜக, பாமகவினர் புறக்கணித்தனர். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.இன்று காலை சட்டப்பேரவ... மேலும் பார்க்க