செங்கம் கோயிலில் நந்தீஸ்வரா் மீது சூரிய ஒளி பட்டு பொன்னிறமாக மாறும் நிகழ்வு
Modi: மோடிக்காக ரிஸ்க் எடுத்த ட்ரம்ப்; சீனா உடன் போட்டி - உலக முன்னேற்றத்துக்கு மோடி சொன்ன வழி!
பிரதமர் மோடியின் சமீபத்திய பாட்காஸ்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான உறவு, உலக அரங்கில் இந்தியாவின் இடம் மற்றும் சீனா உடனான உறவுகள் பற்றி பேசியுள்ளார்.
'எந்த நாடும் தனியாக இருக்க முடியாது'
உலக விவகாரங்களில் இந்தியாவின் தாக்கம் குறித்து உரையாடப்பட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஆதிக்கத்தை தேடாமல், நாகரீக நெறிமுறைகளால் வழிநடத்தப்படுகிறது எனக் கூறியுள்ளார்.
உக்ரைன் போர், மத்திய கிழக்கு போர்கள், அமெரிக்கா-சீனா என உலக நாடுகள் இடையிலான சிக்கல்கள் குறித்து, "ஒவ்வொரு நாட்டின் வரம்புகளையும் கோவிட் அம்பலப்படுத்தியது. அதிலிருந்து கற்றுக்கொள்வதற்கு பதிலாக, உலகம் துண்டு துண்டாகிவிட்டது." எனக் கூறியுள்ளார்.

ஐ.நா போன்ற உலக நிறுவனங்களின் தோல்வியை சுட்டிக்காட்டி, "நிலைத்தன்மையை பேணுவதற்கான நிறுவனங்கள் (ஐ.நா), உலக நாடுகளுடன் இணக்கத்தை இழந்துவிட்டன." என்றார்.
நாடுகள் தங்களை விரிவாக்கம் செய்துகொள்ளும் கொள்கையிலிருந்து, ஒத்துழைப்புக்கு நகர வேண்டும் என்றவர், "உலகம் சுதந்திரமானது. எந்த நாடும் தனியாக இருக்க முடியாது. முன்னேறுவதற்கான ஒரே பாதை அமைதியும் வளர்ச்சியும் மட்டுமே" எனப் பேசியுள்ளார்.
ட்ரம்ப் உடன் நெகிழ்வான தருணம்
அமெரிக்க அதிபர் உடன் மோடிக்கு இருக்கும் நம்பிக்கை மற்றும் பிணைப்பு குறித்து பேசியவர், அவருடனான அழகிய தருணத்தை நினைவுகூர்ந்தார்.
2019ம் ஆண்டு ஹூஸ்டனில் நடைபெற்ற 'ஹௌடி மோடி' நிகழ்வில் ட்ரம்ப் எந்த தயக்கமும் இல்லாமல், பாதுகாப்பு சிக்கல்கள் இருந்தும், கூட்டமான ஸ்டேடியத்தில் மோடியுடன் நடந்ததை பற்றிப் பேசியுள்ளார். "எனக்காக அவரது மொத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் தூக்கி ஏறியப்பட்டது, அந்த தருணம் மிகவும் நெகிழ்வானதாக இருந்தது" என்றார் மோடி.

ட்ரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு மற்றும் அதிலிருந்து மீண்டது குறித்து, "சுடுபட்ட பிறகும் அவர் அமெரிக்காவுக்கு அசைக்கமுடியாத அர்பணிப்புடன் இருந்தார். அவரது பதில்கள் தனக்கு முன் அமெரிக்கா என்ற உணர்வைக் காட்டின, நான் 'முதலில் தேசம்' என்ற நிலைப்பாட்டை நம்புவதைப் போல" என்றார்.
மேலும் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் உடனான முதல் சந்திப்பு பற்றி பேசும்போது, "அவர் என்னை வெள்ளை மாளிகையைச் சுற்றி காண்பிக்க அழைத்துச் சென்றார். வரலாற்று தகவல்களை எந்த குறிப்பும் இல்லாமல் விளக்கினார். அவர் ஜனாதிபதி பதவியை எவ்வளவு மதிக்கிறார் என்பதை அது காட்டியது." என்றார் மோடி.
ட்ரம்ப் ஆட்சியில் இல்லாதபோதும் அவர்களுக்கு இடையிலான நட்பு எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்ததாகக் கூறியுள்ளார்.
இந்தியா-சீனா சிக்கல் பற்றி Modi!
இந்தியா மற்றும் சீனா இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார தொடர்புகள் பற்றி பேசிய மோடி, இரண்டு நாகரீகங்களும் ஒருகாலத்தில் உலகின் ஒட்டுமொத்த ஜி.டி.பி-யில் பாதி அளவுக்கு பங்களித்ததாக கூறியுள்ளார். "பல நூற்றாண்டுகளாக, இந்தியாவும் சீனாவும் ஒருவரிடத்திலிருந்து மற்றொருவர் கற்றுக்கொண்டனர். எதிர்காலத்திலும் எங்கள் உறவுகள் வலுவானதாக இருக்க வேண்டும்" எனப் பேசியுள்ளார்.

எல்லை பதற்றம் குறித்து பேசுகையில், 2020-ல் ஏற்பட்ட மோதல்கள் பற்றியும் சமீப கால முன்னேற்றம் குறித்தும் பேசியுள்ளார். "நானும் அதிபர் ஸீ ஜின்பிங்-க்கும் சந்தித்த பிறகு, எல்லையில் இயல்பு நிலை திரும்பியது. 2020-க்கு முந்தைய நிலைக்கு நிலைமையை மீட்டெடுக்க நாங்கள் முயன்றுவருகிறோம். நம்பிக்கை உருவாக கொஞ்சம் நேரமெடுக்கலாம், ஆனால் நாங்கள் உரையாடலில் உறுதியாக இருக்கிறோம்" என்றார் மோடி.
பிரச்னைகளுக்கு பதிலாக ஆரோக்கியமான போட்டி இருக்கலாம் என்பதை மோடி, வலியுறுத்தினார். "21ம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு. இந்தியாவும் சீனாவும் இயல்பாகவே போட்டிபோடலாம், ஆனால் மோதலில் ஈடுபடக் கூடாது" என்றார் மோடி.