ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதி பலி
ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.
ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவின் எல்லை மாவட்டமான ஹண்ட்வாராவில் உள்ள ஜசல்தாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, திங்கள்கிழமை காவல்துறை மற்றும் பாதுகாப்புப்படையின் கூட்டுக் குழு அங்கு சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. உடனே பாதுகாப்புப்படையினரும் பதில் தாக்குதல் தொடுத்தனர்.
அப்பாவுவுக்கு எதிரான அதிமுக தீர்மானம் தோல்வி!
அடுத்தடுத்த துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் காவலர் ஒருவரும் காயமடைந்தார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. காயமடைந்த காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேடுதல் நடவடிக்கையை தீவிரப்படுத்த கூடுதல் படையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். இரண்டு முதல் மூன்று பயரங்கரவாதிகள் அந்தப் பகுதியில் சிக்கியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.