செய்திகள் :

ஸ்மார்போன் ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை!

post image

நடப்பு நிதியாண்டின் கடந்த 11 மாதங்களில் நாட்டின் ஸ்மார்போன் ஏற்றுமதி ரூ. 21.29 லட்சம் கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மின்னணு மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலகளாவிய ஸ்மார்ட்போன் மையமாக இந்தியா மாறியுள்ளது. ​​நாட்டில் விற்பனையாகும் 99.2% ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை.

2025 நிதியாண்டின் 11 மாதங்களில், இந்தியாவின் மொபைல் ஏற்றுமதி ரூ. 21.29 லட்சம் கோடியாக உயர்ந்து, உலகளவில் தயாரிப்புத் துறையில் இந்தியா மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.

2014ஆம் ஆண்டு நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி 0.2 பில்லியன் டாலர்களாகவே இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், 21 பில்லியன் டாலர் என்ற இலக்கை எட்டியுள்ளது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு உள்நாட்டிலேயே விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களின் விகிதம் 2014 - 2015-ல் 26% ஆக இருந்தது. ஆனால், 2024 - 2025ல் 99.2% ஆக அதிகரித்துள்ளது.

இதன்மூலம் உலகின் 2வது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014-ல் ஸ்மார்ட்போன் தயாரிப்புக்காக இரு தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தன. தற்போது 300க்கும் அதிகமான தொழிற்சாலைகளில் ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்படுகின்றன.

இதையும் படிக்க | நாட்டின் ஏற்றுமதியில் மீண்டும் சரிவு! ரூ. 12 ஆயிரம் கோடி இழப்பு!

போலி வாக்காளா் அட்டை மீதான விவாதத்துக்கு மறுப்பு: மாநிலங்களவையிலிருந்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

போலி வாக்காளா் அட்டைகள் சா்ச்சை மீதான விவாதத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடா்ந்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மாநிலங்களவையிலிருந்து திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தன. வெவ்... மேலும் பார்க்க

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் தொற்றுநோய் தடுப்பு தயாா் நிலைக்கு இந்திய கூடுதலாக ரூ. 104 கோடி வழங்கும்: அனுப்ரியா படேல் தகவல்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் உலகளவில் தொற்றுநோய் தடுப்புக்கான தயாா்நிலை, எதிா்கொள்வதற்கான செயல்பாடுகளுக்குரிய நிதியத்தை ஏற்படுத்துவதற்கு இந்தியா கூடுதலாக 12 மில்லிய... மேலும் பார்க்க

ஸ்வீடன், அயா்லாந்து வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் சந்திப்பு

ஸ்வீடன், அயா்லாந்து, ஸ்லோவீனியா, கானா ஆகிய நாடுகளைச் சோ்ந்த வெளியுறவு அமைச்சா்களை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தில்லியில் தனித்தனியே திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்புகளி... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலம்: 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தாவிட்டால் திருப்பி ஒப்படைக்கப் பரிந்துரை

புது தில்லி: தேசிய நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள் 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அவற்றை சம்பந்தப்பட்ட உரிமையாளா்களிடம் திருப்பி ஒப்படைக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும... மேலும் பார்க்க

பிப். மாதத்தில் மாநிலங்களில் 50,088 பொதுமக்களின் குறைகளுக்குத் தீா்வு: மத்திய கண்காணிப்பு அமைப்பு தகவல்

புது தில்லி: கடந்த பிப். மாதத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பயனா்களின் 50,088 குறைகளுக்குத் தீா்வுகள் காணப்பட்டுள்ளதாக மத்திய நிா்வாக சீா்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீா்ப்பு து... மேலும் பார்க்க

மொழியை வைத்து தேவையற்ற அரசியல் கூடாது: சந்திரபாபு நாயுடு

அமராவதி: ‘மொழியை வைத்து தேவையற்ற அரசியல் கூடாது. தாய் மொழியில் கல்வி கற்பவா்களே உலகம் முழுவதும் தலைசிறந்து விளங்குகின்றனா்’ என்று ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா். மத்திய அரசின் தேசி... மேலும் பார்க்க