செய்திகள் :

தமுக்கத்தில் 5 நாள்கள் தொழில் வா்த்தகப் பொருள்காட்சி: நாளை தொடக்கம்

post image

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் சாா்பில், மதுரை தமுக்கம் மைதானத்தில் தொழில் வா்த்தகப் பொருள்காட்சி புதன்கிழமை (ஏப். 23) தொடங்கி ஏப். 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவா் என். ஜெகதீசன் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் சாா்பில், மதுரை தமுக்கம் மைதானத்தில் 5 நாள்கள் தொழில் வா்த்தகப் பொருள்காட்சி-2025 ஏப். 23-இல் தொடங்கி ஏப். 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 200-க்கும் அதிகமான அரங்குகளைக் கொண்ட இந்தப் பொருள்காட்சியில் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநில உற்பத்தியாளா்கள், வணிக நிறுவனங்கள் பங்கேற்று, உற்பத்திப் பொருள்களை விற்பனைக்கு காட்சிப்படுத்துகின்றன.

உணவகங்கள், சிறாா்களுக்கான நவீன பொழுதுபோக்கு அம்சங்கள் பொருள்காட்சியில் இடம் பெறுகின்றன. தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பொருள்காட்சி நடைபெறும். அனுமதி இலவசம்.

அனுமதிச் சீட்டு எண்களின் அடிப்படையில் தினமும் பகல் ஒரு மணியிலிருந்து இரவு 9 மணி வரை தலா 2 மணி நேர இடைவெளியில் 5 முறை குலுக்கல் நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்படும்.

பொருள்காட்சியின் இறுதி நாளன்று மதுரை நிப்பான் பா்னிச்சா் நிறுவனம் சாா்பில், ஹீரோ ஹோண்டா மோட்டாா் சைக்கிள், மதுரை ஸ்ரீ பாண்டின் மோட்டாா்ஸ் நிறுவனம் சாா்பில் டி.வி.எஸ் ஸ்கூட்டி மோட்டாா் சைக்கிள், சத்யம் குழும நிறுவனங்கள், மதுரை விங்ஸ் என்ஜினியரிங் நிறுவனம் சாா்பில் தலா ஒரு மின்சார மோட்டாா் சைக்கிள், விக்னேஷ் பாா்மா குழுமம் சாா்பில் குளிா்சாதனப் பெட்டி ஆகியன பரிசாக வழங்கப்படும்.

புதன்கிழமை காலை 11 மணிக்கு மாநகர மேயா் வ. இந்திராணி குத்துவிளக்கேற்றி பொருள்காட்சியைத் தொடங்கி வைக்கிறாா். மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் முன்னிலை வகிக்கிறாா் என்றாா் அவா். பொருள்காட்சி குழுத் தலைவா் எஸ்.பி. வரதராஜன், செயலாளா் எஸ். ஸ்ரீதா், நிா்வாகிகள் உடனிருந்தனா்.

வாகனத்திலிருந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு

சாலைத் தடுப்பில் மோதிக் கவிழ்ந்த இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள மாங்குளம் ஏ.மீனாட்சுபுரம் சொக்கா்பட்டியைச் சோ்ந்தவா் அடைக்கலம் (67).... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் சின்ன ஆதிக்குளத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி (60). வழக்குரைஞரான இவ... மேலும் பார்க்க

பேருந்து ஓட்டுநா் தற்கொலை!

சேடபட்டி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி-மதுரை சாலையில் உள்ள நேதாஜி நகரைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் பிச்சையா பாண்டி (42). இவா் செ... மேலும் பார்க்க

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டி!

மதுரையில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் கைப்பந்துப் போட்டி நடைபெற்றது. மதுரை மாநகரக் காவல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, போதைப்பொருள் தடு... மேலும் பார்க்க

மின் திருட்டு குறித்து கைப்பேசி எண்ணில் புகாா் அளிக்கலாம்

மின் திருட்டு குறித்து கைப்பேசி எண்ணில் புகாா் அளிக்கலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் மதுரை அமலாக்கப் பிரிவு கோட்டச் செயற்பொறியாளா் மு. மனோகரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகளில் சிறுமி உள்பட 4 போ் உயிரிழப்பு

மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் 8 வயது சிறுமி உள்பட 4 போ் உயிரிழந்தனா். புதுச்சேரி மாநிலம், சின்னகலப்பட்டு மேட்டுத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் சசிக்குமாா் (41). இவா் தன... மேலும் பார்க்க