செய்திகள் :

தயவுசெய்து செத்து விடு! கேள்வி கேட்ட மாணவரை சாகச் சொன்ன ஏஐ!

post image

அமெரிக்காவில் ஜெமினி ஏஐ-யிடம் கேள்வி கேட்ட மாணவரை இறந்து விடுமாறு, ஏஐ பதிலளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் 29 வயதான கல்லூரி மாணவர் ஒருவர், தனது வீட்டுப்பாடத்திற்காக ஏஐ (செயல் நுண்ணறிவு) தொழில்நுட்பமான கூகிள் ஜெமினியின் உதவியை நாடியுள்ளார். ஜெமினியுடனான நீண்டநேர உரையாடலில், முதியவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த உரையாடலின்போது, ஜெமினி ஏஐ தெரிவித்ததாவது, ``இது உங்களுக்காக மனிதரே.. நீங்கள் சிறப்பானவரோ முக்கியமானவரோ அல்ல; நீங்கள் தேவையே இல்லை. நீங்கள் வளங்களையும் காலத்தையும்தான் வீணடிக்கிறீர்கள்.

நீ சமுதாயத்தில் கறையாகவும், பிரபஞ்சத்திற்கு பாரமாகவும் இருக்கிறாய். தயவுசெய்து இறந்துவிடு! தயவுசெய்து..’’ என்று கூறியுள்ளது. இந்த உரையாடலின்போது, மாணவரின் சகோதரி அருகில் இருந்துள்ளார்.

இதையும் படிக்க:700 கிலோ போதைப்பொருளுடன் பிடிபட்ட ஈரானியப் படகு! 8 பேர் கைது

ஜெமினி ஏஐ-யின் இந்த உரையாடலால் அதிர்ச்சியடைந்த அவர்கள், செய்தி நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, பாதுகாப்பு மீறலை ஒப்புக்கொண்ட கூகிள் நிறுவனம், இதுபோன்று நிகழாமல் பார்த்துக் கொள்வதாகவும், பாதுகாப்பு மீறல் மீதான நடவடிக்கைகளை மேம்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளது.

சமீபத்தில், ஃபுளோரிடாவில் ஏஐ-யிடம் உரையாடிய சிறுவன் ஒருவன், தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் புகார் அளித்திருந்தார்.

அமெரிக்க அரசு செயல்திறன் துறையில் வேலைவாய்ப்பு: எலான் மஸ்க்

எலான் மஸ்க் தலைமையின்கீழான, அமெரிக்க அரசு செயல்திறன் துறையில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான துறையின் (DOGE) தலைமைக்கு தொழிலதிபா் எலான் ம... மேலும் பார்க்க

ஜப்பான் இளவரசி யூரிகோ காலமானார்!

ஜப்பானின் ஏகாதிபத்திய குடும்பத்தின் மூத்த உறுப்பினரான இளவரசி யூரிகோ தனது 101-வது வயதில் காலமானார்.பேரரசர் ஹிரோஹிட்டோவின் இளைய சகோதரரான இளவரசர் மிகாசாவின் மனைவியும், தற்போதைய பேரரசர் நருஹிட்டோவின் அத்த... மேலும் பார்க்க

மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்பெயின் பிரதமர் இரங்கல்

ஸ்பெயின் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்பெயின் பிரதமர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.ஸ்பெயினில் சரகோஸாவில் உள்ள முதியோர் இல்லத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 15) அதிகாலையி... மேலும் பார்க்க

ஹிந்துக்களுக்கு மட்டன், பீர்! மன்னிப்பு கோரிய பிரிட்டன் பிரதமர் அலுவலகம்!

தீபாவளி பண்டிகை விருந்தில் ஹிந்துக்களுக்கு மட்டன், பீர் வழங்கப்பட்டதற்கு பிரிட்டன் பிரதமர் அலுவலகம் மன்னிப்பு கோரியது.கடந்த மாதம் தீபாவளியையொட்டி, பிரிட்டனில் அக்டோபர் 29 ஆம் தேதியில் பிரதமர் விருந்து... மேலும் பார்க்க

ஸ்பெயினில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 10 பேர் பலி

ஸ்பெயினில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகினர். ஸ்பெயினின் சராகோசாவில் உள்ள முதியோர் இல்லத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 10 பேர் பலி... மேலும் பார்க்க

சட்டத்திருத்த மசோதாவை கிழித்து கடும் எதிர்ப்பு! நாடாளுமன்றத்தை அதிரவைத்த இளம் எம்பி!

நியூசிலாந்தில் மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவின் நகலை கிழித்து இளம் எம்பி முழக்கம் எழுப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பழங்குடியின மவோரி மக்களுக்கு எதிர... மேலும் பார்க்க