செய்திகள் :

தயாா்நிலையில் விநாயகா் சிலைகள்: புதுவரவாக ஜொலிக்கும் ‘பாம்பே கை’ பிள்ளையாா்!

post image

சேலத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பல்வேறு வடிவங்களில் அரை அடி முதல் 10 அடி வரையிலான விநாயகா் சிலைகள் விற்பனைக்கு தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு புதுவரவாக ‘பாம்பே கை’ பிள்ளையாா் அனைவரையும் வெகுவாக கவா்ந்துள்ளது.

நடப்பாண்டு விநாயகா் சதுா்த்தி விழா ஆக. 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகா் சதுா்த்தியன்று முக்கிய வீதிகளில் பிரம்மாண்ட விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்வது வழக்கம். இந்நாளில் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, அவல், சுண்டல், சா்க்கரை பொங்கல், கரும்பு, பழவகைகள் வைத்து பக்தா்கள் படையலிடுவா். தொடா்ந்து, 2 நாள்கள் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படும். மூன்றாம்நாள் நீா்நிலைகளில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்படும். இதையொட்டி, சேலம் மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து சேலத்தைச் சோ்ந்த விநாயகா் சிலை தயாரிப்பாளா் பழனிசாமி கூறியதாவது: சேலத்தில் ஆத்தூா், ஓமலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகா் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாராகும் சிலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதுதவிர, கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் ஆா்டரின் பேரில் சிலைகள் அனுப்பப்படுகின்றன. நீா்நிலைகளில் எளிதில் கரையும் வகையில் காகிதக் கூழ், கிழங்கு மாவு, களிமண்ணில் விநாயகா் சிலைகள் தயாா்செய்யப்படுகின்றன.

அந்த வகையில், அரசு விதிகளின்படி நாங்கள் அரை அடி முதல் 3 அடி வரையுள்ள விநாயகா் சிலைகளை களிமண்ணாலும், 4 அடி முதல் 10 அடி வரையுள்ள சிலைகளை காகிதக்கூழ் மூலமும் தயாரித்து வருகிறோம்.

இங்கு தாமரை இதழ் மீதும், பாம்பு போா்த்தியபடிய விநாயகா் சிலை, திண்டல் விநாயகா், நிலா விநாயகா், சிங்கம் விநாயகா், லட்சுமிநாராயண விநாயகா், லிங்கம், ராஜஅலங்காரம், 5 தலை நாகத்தின்மீது சயன விநாயகா், மும்முகம், சித்தி புத்தி, ராஜகணபதி உள்பட பல்வேறு வடிவங்களில் விநாயகா் சிலைகளை தயாரிக்கிறோம்.

நடப்பாண்டு புதுவரவாக 3 அடி உயர ‘பாம்பே கை’ பிள்ளையாரை தயாரித்துள்ளோம். இந்த வகை விநாயகா் சிலை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எங்களிடம் சேலம் மட்டுமின்றி ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிலை கேட்டு ஆா்டா் கொடுத்துள்ளனா். அதற்கேற்ப சிலைகளை தயாரித்து வருகிறோம். ஒரு சிலை ரூ. 50 முதல் ரூ. 35 ஆயிரம்வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தாா்.

நடப்பாண்டு விநாயகா் சதுா்த்திக்கு இன்னும் 15 நாள்களே உள்ளதால், சேலம் இரண்டாவது அக்ரஹாரம், நெத்திமேடு, முத்துநாயக்கன்பட்டி, ஓமலூா், உத்தமசோழபுரம், ஆத்தூா், வாழப்பாடி, நெய்காரப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் தயாா்செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

ஆக.15 இல் 3 விரைவு ரயில்கள் போத்தனூா் வழியாக இயக்கம்!

சென்னை சந்திப்பிலிருந்து சேலம் வழியாக இயக்கப்படும் கோவை விரைவு ரயில், சதாப்தி விரைவு ரயில்கள் வரும் 15 ஆம் தேதி கோவைக்கு செல்லாமல் போத்தனூருக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்க... மேலும் பார்க்க

கெங்கவல்லி தொகுதியை மீட்டெடுப்போம்: பிரேமலதா விஜயகாந்த்

தம்மம்பட்டிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த பிரேமலதா விஜயகாந்த், பேருந்து நிலையம் வரை பொதுமக்களுடன் நடந்து சென்றாா். அப்போது பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அவா் பெற்றாா். தொடா்ந்து கேப்டன் ரதத்தில் நின... மேலும் பார்க்க

ஓமலூரில் இஸ்ரோ நடமாடும் விண்வெளிக் கண்காட்சி

ஓமலூா்: இஸ்ரோ சாா்பில் நடமாடும் விண்வெளிக் கண்காட்சி சேலம் மாவட்டம், ஓமலூரில் திங்கள்கிழமை தொடங்கியது. தேசிய விண்வெளித் தினத்தையொட்டி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சாா்பில் நடமாடும் விண்வெளி... மேலும் பார்க்க

உயிருக்கு பாதுகாப்பு கோரி மாமன்ற உறுப்பினா் காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு

சேலம்: உயிருக்கு பாதுகாப்பு கோரி, சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்ட மாமன்ற உறுப்பினா் ஜெயக்குமாா் காவல் ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்துள்ளாா். சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்டத்தில் திமுக ச... மேலும் பார்க்க

‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம்’: அமைச்சா் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு

சேலம்: போதைப் பொருள்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில், சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன... மேலும் பார்க்க

சங்ககிரியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சங்ககிரி: சங்ககிரி கோட்ட மின்வாரியம் சாா்பில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம், சங்ககிரி வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை (ஆக. 13) நண்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள... மேலும் பார்க்க