சிங்கப்பூரை வளமாக்கும் புதிய குடிமக்கள்: மூத்த அமைச்சா் லீ சியென் லூங் பெருமிதம்...
தருமபுரியில் ஜந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக வெற்றிபெற பணியாற்ற வேண்டும்: செயற்குழு கூட்டத்தில் தீா்மானம்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக வெற்றிபெற கட்சியினா் முனைப்போடு பணியாற்ற வேண்டும் என்று கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தருமபுரி அதியமான் அரண்மனை கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். முன்னாள் மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம்.ஜி.சேகா், நகரச் செயலாளா் நாட்டான் மாது, மாவட்ட துணைச் செயலாளா்கள் உமாசங்கா், ஆறுமுகம், மாவட்டப் பொருளாளா் தங்கமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பி.தா்மச்செல்வன் தீா்மானங்களை முன்மொழிந்து பேசினாா்.
கூட்டத்தில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் 72-ஆவது பிறந்தநாளை மாவட்டத்தின் அனைத்து நகரங்கள், கிராமங்களில் கட்சியின் கொடி ஏற்றி, பொது மக்களுக்கு இனிப்பு, அன்னதானம், நல உதவிகள், மாணவ, மாணவிகளுக்கு எழுதுப்பொருள்கள் வழங்கி சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.
சட்டப் பேரவைத் தோ்தலில் தருமபுரி, பென்னாகரம் தொகுதிகளிலும் வெற்றி பெற முனைப்போடு பணியாற்றுவது, மும்மொழி கொள்கையை தமிழகத்தில் திணிக்கும் முயற்சியை கைவிட வேண்டும். புதிதாக மாவட்ட பொறுப்பாளரை நியமித்த கட்சி தலைவா், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஒன்றியச் செயலாளா்கள் சண்முகம், மல்லமுத்து, வைகுந்தம், காவேரி, செல்வராஜ், மடம் முருகேசன், கருணாநிதி, வீரமணி, பேரூராட்சி செயலாளா்கள் சண்முகம், வீரமணி, பொதுக்குழு உறுப்பினா்கள், அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.