தருமபுரியில் 201.2 மி.மீ. மழை
தருமபுரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 201.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் பதிவான மழை அளவு (மி.மீ.):
தருமபுரி-30, பாலக்கோடு- 34.2, மாரண்ட அள்ளி-39, பென்னாகரம்-5, ஒகேனக்கல்-19.6, அரூா்-24.4, பாப்பிரெட்டிப்பட்டி-26, மொரப்பூா்-23. மொத்த மழையளவு 201.2. சராசரி மழையளவு 22.36.