செய்திகள் :

தற்கொலை நோக்கில் யமுனை ஆற்றில் குதித்த சிறுமியை காப்பாற்றிய போலீஸார்

post image

தில்லியில் தற்கொலை நோக்கில் யமுனை ஆற்றில் குதித்த 15 வயது சிறுமியை போலீஸார் காப்பாற்றியுள்ளனர்.

தலைநகர் தில்லியில் உள்ள ரூப் நகர் காவல் நிலையத்திற்கு மகள் காணாமல் போனதாக பெண் ஒருவரிடம் இருந்து சனிக்கிழமை அழைப்பு வந்திருக்கிறது. குடும்பத்தினர் அனைவரும் வெளியில் சென்றிருந்த நிலையில், தனது மகள் வீட்டில் தனியாக இருந்ததாக சிறுமியின் தாயார் போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார்.

வீட்டிற்குத் திரும்பியதும், சிறுமி தற்கொலைக் குறிப்பு கடிதத்தை மகன் கண்டுபிடித்தாகவும், எனவே, தனது மகள் கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று தாய் கவலைப்பட்டுள்ளார்.

உடனே காவல் அதிகாரி வினிதா தியாகி தலைமையிலான போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிக்னேச்சர் பாலம் மற்றும் வஜிராபாத் பழைய பாலம் பகுதிகளை மையப்படுத்தி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அவர்கள் விசாரணையில் இறங்கினர்.

பேருந்து - கார் மோதல்: சபரிமலை சென்ற தமிழக பக்தர்கள் இருவர் பலி!

மேலும் மெட்ரோ தள காவலர்களுக்கும் தகவல் தெரிவித்து தேடுதல் பணியை மேற்கொண்டனர். காவல் துறையின் துணை ஆணையர் ராஜா பந்தியா கூறுகையில், தேடலின் போது ​​சிறுமி யமுனை ஆற்றில் குதிப்பதைக் கண்டோம்.

உடனடியாக காவலரும் நீச்சல் வீரருமான பிரிஜேஷ் குமார் ஆற்றில் குதித்து அந்த சிறுமியைக் காப்பாற்றினார். சிறுமியை பத்திரமாக கரைக்கு இழுத்து கொண்டு வந்து காவல் துறையினர் ஆலோசனை நடத்தினர். பின்னர் அந்த சிறுமி அவரது குடும்பத்துடன் மீண்டும் இணைந்தார் என்று தெரிவித்தார்.

முன்னதாக சிறுமியின் படிப்பு தொடர்பாக வீட்டில் தாயுடன் நடைபெற்று உரையாடலுக்குப் பிறகே அவர் இந்த தற்கொலை முடிவை நாடிச் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சண்டீகர் பிரதேசத்துக்கு தலைமைச் செயலர் பதவி உருவாக்கம்!

சண்டீகர் யூனியன் பிரதேசத்துக்கு தலைமைச் செயலாளர் பதவியை உருவாக்கி மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது.ஒருங்கிணைந்த பஞ்சாபில் இருந்து பிரிக்கப்பட்டு, கடந்த 1966-ஆம் ஆண்டில் ஹரியாணா தனி மாநிலமாக உருவாக்கப்ப... மேலும் பார்க்க

தில்லி உயர்நீதிமன்றத்தில் 2 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

தில்லி உயர் நீதிமன்றத்தில் இரண்டு கூடுதல் நீதிபதிகள் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். இதனிடையே மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையை 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பார்க்க

மகா கும்பமேளாவிற்காக கங்கையைத் தூர்வாருவது "சுற்றுச்சூழல் குற்றம்": அகிலேஷ்

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவிற்காக கங்கையைத் தூர்வாருவது சுற்றுச்சூழல் குற்றம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் புதன்கிழமை தெரிவித்துள்ளார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 8 வீரர்கள் மரணம்!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 8 பேர் வீர மரணம் அடைந்தனர். சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இன்று(புதன்கிழமை) மாவோயிஸ்டுகள் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்த... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் தொடங்கியது!

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களை பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் தொடங்கியுள்ளது.மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல்... மேலும் பார்க்க

மலப்புரம்: தும்பிக்கையால் தூக்கி வீசிய யானை; மிரண்டு ஓடிய 21 பேர் காயம்!

கேரளத்தின் மலப்புரத்தில் திருவிழாவின் போது, அழைத்து வரப்பட்ட யானைக்கு மதம் பிடித்தது. அதைக்கண்டு மிரண்டு ஓடியதில் 21 பேர் காயமடைந்தனர்.கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் திரூர் பகுதியில் உள்ள பிபி அங்க... மேலும் பார்க்க