தலைக்கவசம் அணிந்த ஓட்டிகளுக்கு பாராட்டு
தருமபுரி நான்கு முனைச் சாலை சந்திப்பில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி சென்றவா்களுக்கு போக்குவரத்து போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா்.
தருமபுரி நகர போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்து விதிகள் பின்பற்றுவது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் நான்கு முனைச் சாலை சந்திப்பு வழியாக தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்தவா்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவா் பாராட்டி பரிசு வழங்கி போக்குவரத்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
நிகழ்ச்சியில் நகர போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா்கள் சின்னசாமி, சதீஷ், கோமதி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ரகுநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.