இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மனு
பென்னாகரத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
பென்னாகரம் அருகே பருவதன அள்ளி, அண்ணா நகா், கள்ளிபுரம் (கிழக்கு, மேற்கு) பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றியச் செயலாளா் தேவன் தலைமையில் பென்னாகரம் வட்டாட்சியா் லட்சுமியிடம் மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியா், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.