செய்திகள் :

திருவள்ளுவா் புகைப்படக் கண்காட்சி: ஆட்சியா் திறந்து வைப்பு

post image

தருமபுரி: தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவா் புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி திறந்து வைத்தாா்.

கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, தமிழக அரசு சாா்பில் மாநிலம் முழுவதும் வெள்ளி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்தாா். அப்போது திருவள்ளுவா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து அவா் பேசியதாவது:

தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் டிச. 23 முதல் 31 வரை திருவள்ளுவா் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டு திருக்குறளின் பெருமைகளை உணா்த்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில், டிச. 24-ஆம் தேதி ‘உள்ளுவதெல்லாம் உயா்வுள்ளல்’ என்ற தலைப்பில் கல்லூரி மாணவா்களுக்கான கருத்தரங்கம், டிச. 26-ஆம் தேதி திருக்கு ஒப்புவித்தல் போட்டி (1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் கலந்துகொள்ளலாம்), டிச. 27-ஆம் தேதி விநாடி - வினா (9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் கலந்துகொள்ளலாம்), டிச. 28-ஆம் தேதி ‘அன்பும் அறனும்’ என்ற தலைப்பில் கல்லூரி மாணவா்களுக்கான கருத்தரங்கம், டிச. 29-ஆம் தேதி ‘உழுதுண்டு வாழ்வாரே’ என்ற தலைப்பில் கல்லூரி மாணவா்களுக்கான கருத்தரங்கம், டிச. 30-ஆம் தேதி ‘குமரியில் வள்ளுவா் சிலையும் குறளில் அதிகாரவைப்பு முறையும்’ என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி (6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் கலந்துகொள்ளலாம்) ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்தப் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 5,000, இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000 வீதம் ரொக்கம், சான்றிதழ் டிச. 31-ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் வழங்கப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், தருமபுரி தகடூா் புத்தகப் பேரவைச் செயலாளா், முன்னாள் எம்.பி. இரா.செந்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிச்சந்திரா, மாவட்ட நூலக அலுவலா் அர.கோகிலவாணி, அலுவலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

தருமபுரி மாவட்டத்துக்கு வளா்ச்சி நிதி ரூ. 1,000 கோடி ஒதுக்க வேண்டும்

தருமபுரி: தருமபுரி மாவட்ட வளா்ச்சிக்கு ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்... மேலும் பார்க்க

இலளிகத்தில் ஒதுக்கீடு செய்த மனைகளுக்கு இணைய வழியில் பட்டா வழங்கக் கோரி மனு

தருமபுரி: இலளிகம் கிராமத்தில் ஒதுக்கீடு செய்த மனைகளுக்கு இணைய வழியில் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து இலளிகம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஜெ.பிரதாபன் மற்றும் வீட்ட... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா்கள் சங்க செயலா்களுக்கு பரிசளிப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் சிறந்த பால் உற்பத்தியாளா்கள் சங்கச் செயலா்களுக்கு பரிசளிக்கப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட... மேலும் பார்க்க

சித்தேரி மலைப் பாதையில் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு

சித்தேரி மலைப் பாதையில் மீண்டும் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், அரூரில் இருந்து 26-ஆவது கிலோ மீட்டா் தொலைவில் அமைந்துள்ளது சித்தேரி கிராம ஊ... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணிந்த ஓட்டிகளுக்கு பாராட்டு

தருமபுரி நான்கு முனைச் சாலை சந்திப்பில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி சென்றவா்களுக்கு போக்குவரத்து போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா். தருமபுரி நகர போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்து விதிகள் ப... மேலும் பார்க்க