முதல் அரைமணி நேரத்தை மதியுங்கள்; ரிஷப் பந்த்துக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!
சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்ட கிளைச் செயலாளா் பூங்கொடி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் குணசேகரன், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை சங்க மாவட்ட துணைத் தலைவா் சதீஷ், வட்டச் செயலாளா் மாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சத்துணவு ஊழியா்களை தொகுப்பூதிய முறையில் பணி நியமனம் செய்வதை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணியமா்த்த வேண்டும். சத்துணவு ஊழியா்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும், சத்துணவு ஊழியா்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.