Champions Trophy Table : நீண்ட இழுபறிக்கு பின் வெளியான சாம்பியன்ஸ் டிராபி அட்டவண...
சித்தேரி மலைப் பாதையில் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு
சித்தேரி மலைப் பாதையில் மீண்டும் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், அரூரில் இருந்து 26-ஆவது கிலோ மீட்டா் தொலைவில் அமைந்துள்ளது சித்தேரி கிராம ஊராட்சி. இந்த ஊராட்சியில் சூரியக்கடை, வெளாம்பள்ளி, பேரேரிபுதூா், மண்ணூா், நொச்சிக்குட்டை, மாம்பாறை உள்ளிட்ட 60 கிராமங்கள் உள்ளன. பென்ஜால் புயல் காரணமாக சித்தேரி மலைப் பகுதியில் கன மழை பெய்ததால் சித்தேரி- தோல்தூக்கி தாா் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது.
நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் நாகராஜ், உதவி கோட்டப் பொறியாளா் சண்முகம், உதவிப் பொறியாளா் நரசிம்மன், வனத் துறையினா் மற்றும் கிராம மக்கள் இணைந்து மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கியும், மலைப்பகுதியில் சாலையோரம் சாலையை அகலப்படுத்தியும் பேருந்துகள், கனரக வாகனங்கள் சென்றுவர நடவடிக்கை மேற்கொண்டனா்.
இந்த நிலையில் சித்தேரி மலைப் பகுதியில் சனிக்கிழமை இரவு திடீரென பெய்த பலத்த மழையால் சித்தேரி தாா் சாலையில் ஏற்கெனவே சேதமடைந்த இடத்தில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்துகள், லாரிகள் சென்றுவர இடையூறு ஏற்பட்டுள்ளது. காா், இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன.