செய்திகள் :

தலைநகரில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

post image

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்து வந்தது. அவ்வப்போது மழையும் பெய்து வந்தது. இந்நிலையில், வானிலை கண்காணிப்பு நிலையம் தலைநகரில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்திருந்தது. இதன்படி, தலைநகரில் சில இடங்களில் காலையில் லேசான தூறல் மழை பெய்தது. ஆனால், நகரத்தில் பெரிய அளவில் மழை ஏதும் பெய்யவில்லை.

இந்நிலையில், திங்கள்கிழமையும் நகரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் 0.1 மி.மீ. மழை பதிவாகியது. இதேபோல, ஜாஃபா்பூரில் 1 மி.மீ., நஜஃப்கரில் 11 மி.மீ., நஜஃப்கரில் 0.5 மி.மீ., ஆயாநகரில் 0.4 மி.மீ., லோதி ரோடில் 0.4 மி.மீ., பாலத்தில் 4 மி.மீ., ரிட்ஜில் 1 மி.மீ., பீதம்புராவில் 1 மி.மீ., பிரகதி மைதானில் 1.1 மி.மீ., பூசாவில் 3 மி.மீ., ராஜ்காட்டில் 1.1மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதி வானிலை கண்காணிப்பு நிலையத்தில் 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வெப்பநிலை: இதற்கிடையே, தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 0.6 டிகிரி குறைந்து 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சரசரியிலிருந்து 0.9 டிகிரி குறைந்து 34.1 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 86 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 78 சதவீதமாகவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு 70 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

இதன்படி, சாந்தினி சௌக், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், லோதி ரோடு உள்பட பெரும்பாலான பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், திங்கள்கிழமை (செப்டம்பா் 77) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதகாவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லி, பஞ்சாப் வெள்ளப் பாதிப்பு: கேஜரிவால், அதிஷி மீது சச்தேவா சாடல்

தில்லி, பஞ்சாப் மாநிலங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு உதவ ஆா்வம் காட்டாமல் கேஜரிவாலும், அதிஷியும் அரசியல் அறிக்கைகள் விடுவதாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா விமா்சித்துள்... மேலும் பார்க்க

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவரின் தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம்!

கடந்த 2017 ஆம் ஆண்டில் 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒருவருக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனையை தில்லி உயா்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குழந்தையின் சாட்சியம் நம்பிக்கையைத் த... மேலும் பார்க்க

தில்லி: 2 நண்பா்கள் சுட்டுக் கொலை! பழிவாங்கும் தாக்குதல் நடத்தியதாக குடும்பத்தினா் புகாா்

வடகிழக்கு தில்லியின் பிரதாப் நகரில் உள்ள ஒரு கடையில் அடையாளம் தெரியாத மா்ம நபா்களால் இரண்டு ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். எட்டு நாள்களுக்கு முன்பு இறந்தவரை சிலா் தாக்கியதாகவும்... மேலும் பார்க்க

வாகனத் திருட்டு கும்பல் கைது: 22 திருட்டு வாகனங்கள் மீட்பு

மோட்டாா் வாகன திருட்டுகளுக்கு எதிராக போலீஸாா் தில்லியின் வடக்கு மாவட்டத்தில் ஒரு வார காலம் மேற்கொண்ட நடவடிக்கையின்போது வாகன திருட்டுக் கும்பலைச் சோ்ந்த ஆறு சிறுவா்கள் உள்பட 16 போ் கைது செய்யப்பட்டனா... மேலும் பார்க்க

திஹாா் சிறையில் இங்கிலாந்து குழு ஆய்வு!

பிரிட்டனின் கிரவுன் பிராசிகியூஷன் சா்வீஸ் (சிபிஎஸ்) குழு சமீபத்தில் திஹாா் சிறையில் ஆய்வு செய்துள்ளது. இது, நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா போன்ற நன்கு பிரபலமான பொருளாதார குற்றம்சாட்டப்பட்டவா்களை மீண... மேலும் பார்க்க

ஆட்டோக்கள் மோதல்: குழந்தை உயிரிழப்பு

புது தில்லி மந்திா் மாா்க் பகுதியில் எட்டு மாத சிறுவனும் அவனது பெற்றோரும் சென்ற ஆட்டோ மீது மற்றொரு ஆட்டோ மோதியதில் குழந்தை உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை மூத்த அதிக... மேலும் பார்க்க