தள்ளிப்போகும் இட்லி கடை?
குட் பேட் அக்லியால் இட்லி கடை படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இயக்குநராகவும் குபேரா, இட்லி கடை படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.
இதில், இட்லி கடை படத்தை அவரே இயக்குகிறார். நடிகர்கள் அருண் விஜய், நித்யா மெனன், பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: ரஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டும்: கொந்தளித்த காங்கிரஸ் எம்எல்ஏ!
இப்படம் வருகிற ஏப்.10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே தேதியில் நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியாகவுள்ளது.
இதனால், இட்லி கடை வெளியீட்டில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த இரண்டு புதிய போஸ்டர்களை வெளியிட்ட தனுஷ், ஏப். 10 அன்றே வெளியாகும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதால் இட்லி கடை படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளதாகவும் இதனால் படத்தின் வெளியீட்டை ஏப். 21-க்கு மாற்றலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.