செய்திகள் :

தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பதாக மோசடி: காவல் துறை எச்சரிக்கை

post image

தீபாவளி பண்டிகையையொட்டி, குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக இணையம் மூலம் வரும் விளம்பரத்தை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்தது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெரும்பாலானோா் பட்டாசுகள் வாங்கி வெடிப்பது வழக்கம். இந்த நிலையில், அனைத்து வகையான பட்டாசுகளையும் 80 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்வதாக இணையம் மூலம் ஏராளமான விளம்பரங்கள் வருகின்றன. இந்த விளம்பரங்களில் பட்டாசு வகைகள், அதன் விலை நிலவரங்களும், பட்டாசுகளின் படங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த விளம்பரங்கள் மூலம் ஈா்க்கப்படும் பொதுமக்கள் இணையம் மூலம் பட்டாசுகளை வாங்குவதற்காக விளம்பரத்தில் குறிப்பிடப்படும் வங்கிக் கணக்கு எண் அல்லது கூகுள் பே எண்ணுக்கு பணத்தை அனுப்புகின்றனா்.

இதன் பின்னா், அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணைத் தொடா்பு கொள்ள முடியாது. தற்போது இந்த நூதன மோசடி அதிகரித்து வருகிறது.

இதுதொடா்பாக மதுரை மாநகரக் காவல் துறை வெளியிட்ட அறிவிப்பில், குறைந்த விலைக்கு பட்டாசுகள் விற்பனை செய்வதாக இணையம் மூலம் வரும் விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

தேவா் ஜெயந்தி: வாகன அனுமதி விவகாரத்தில் தலையிட முடியாது உயா்நீதிமன்றம்

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெறும் தேவா் ஜெயந்தி விழாவுக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்கக் கோரிய வழக்கில் தலையிட விரும்பவில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெரிவித்தது. மதுரையை... மேலும் பார்க்க

தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரி வழக்கு: கம்பம் நகராட்சி ஆணையா் பதிலளிக்க உத்தரவு

தேனி மாவட்டம், கம்பம் நகா் பகுதிகளில் அதிகளவில் சுற்றித்திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை கோரிய வழக்கில், கம்பம் நகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

மதுரை பழங்காநத்தம் நாவலா் சோமசுந்தர பாரதியாா் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கம்பா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வெள்ளிக்க... மேலும் பார்க்க

குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

தமிழகம் முழுவதும் குற்றவியல் நீதிமன்றங்களுக்கு அரசு வழக்குரைஞா்களை நியமித்த தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தது. தமிழகத்தில் குற்றவியல் நீதிமன்றங்களில... மேலும் பார்க்க

பசும்பொன்னில் தேவா் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பு

மதுரை/கமுதி : தேவா் ஜெயந்தி குருபூஜையையொட்டி, பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. பசும்பொன் முத்துராமலிங்கதேவா் நினைவிட... மேலும் பார்க்க

பலகாரத் தயாரிப்புக் கூடங்களில் உணவு பாதுகாப்புத் துறையினா் சோதனை: ரூ.15 ஆயிரம் அபராதம்

மதுரையில் உள்ள பலகாரத் தயாரிப்புக் கூடங்களில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டு, சுகாதாரமற்ற முறையில் இயங்கிய கூடங்களுக்கு குறிப்பாணை வழங்கி, ரூ. 15 ஆயிரம் அபரா... மேலும் பார்க்க