செய்திகள் :

தவெக வடக்கு மண்டல பூத் கமிட்டி கருத்தரங்கம் - வேலூரில் புஸ்ஸி ஆனந்தை களமிறக்கிய விஜய்!

post image

மிழக வெற்றிக் கழகத்தின் மேற்கு மண்டல பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கம் கடந்த மாதம் கோவையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வடக்கு மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களை ஒருங்கேயிணைத்து 2-ம் கட்ட பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கம் நடத்தத் திட்டமிட்டிருக்கும் த.வெ.க தலைவர் விஜய், அதற்கான இடம் தேர்வில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தை களமிறக்கிவிட்டிருக்கிறார். முன்னதாக இன்று (26-5-2025) காலை, மேல்மருவத்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த புஸ்ஸி ஆனந்த் அங்கிருந்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு வந்தார்.

புஸ்ஸி ஆனந்த்

ஆரணியில் கட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பிறகு வேலூர் அருகிலுள்ள பள்ளிகொண்டா கந்தனேரிக்கு மாலை 6.30 மணியளவில் வந்தார். கந்தனேரியில், பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டிய விசாலமான இடத்தை கருந்தரங்கிற்காக தேர்வு செய்யலாமா? என்று பார்வையிட்டு வேலூர் மாவட்ட த.வெ.க நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினார். பிறகு வேலூரில் இருந்து புறப்பட்டு சென்றார் புஸ்ஸி ஆனந்த். அப்போது, த.வெ.க-வின் வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மேற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வினோத் கண்ணன், மேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இம்தியாஸ் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

TVK: "என் இயல்பை மீறிய வார்த்தைகள்; வருந்துகிறேன்" - சர்ச்சை வீடியோவுக்கு ஆதவ் விளக்கம்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்திடம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசும் வீடியோ சமூக வல... மேலும் பார்க்க

"2024-லேயே ராஜ்ய சபா சீட் உறுதி என அதிமுக எழுதிக்கொடுத்தது; எங்கள் நிலைப்பாட்டை..." - பிரேமலதா

அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்படுமா என்பது கடந்த சில நாள்களாகவே பேசுபொருளாகவே இருந்த நிலையில், தே.மு.தி.க-வுக்கு இப்போது இல்லை, 2026-ல் ராஜ்ய சபா சீட் வழங்கப்படும் என்று ... மேலும் பார்க்க

`தேமுதிக-வுக்கு இப்போது இல்லை; 2026-ல் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்கப்படும்' - அதிமுக அறிவிப்பு

நாடாளுமன்ற மாநிலங்களவையில் வைகோ உட்பட தமிழ்நாடு எம்.பி-க்கள் 6 பேரின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், காலியாகும் இடங்களுக்கு யார் யார் வேட்பாளர்கள் என்பது கடந்த சில தினங்களாகவே தி.மு.க, அ.தி.மு.க கூ... மேலும் பார்க்க

DMK: `ஜூன் 3 - செம்மொழி நாள் முதல் கச்சத்தீவு மீட்பு வரை' - திமுக பொதுக்குழுவின் 27 தீர்மானங்கள்

தமிழ்நாடுசட்டமன்றத்தேர்தலுக்குஇன்னும் ஓராண்டு இடைவெளி கூட இல்லாத சூழலில், இப்போதே தேர்தல்வேலையைஆரம்பிக்கும் வகையில் மதுரையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.கபொதுக்குழுகூட்டம் நடைபெற்று வருகிறது.இந... மேலும் பார்க்க

”நடிகர் விஜய்யை காமராஜருடன் ஒப்பிடுவதா?” – மாணிக்கம் தாகூர் எம்.பி கேள்வி

சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய ஒரு மாணவரின் தந்தை “கல்விக்காக பல உதவிகளைச் செய்து வரும் த.வெ.க தலைவர் விஜய்யை ’இளம் காமராஜர்’ என... மேலும் பார்க்க

மதுரை: அறிவாலய என்ட்ரி செட்; பிரமாண்ட கூட்ட அரங்கம் | திமுக பொதுக்குழு ஏற்பாடுகள்... Photo Album

திமுக பொதுக்குழு கூட்ட அரங்கம்திமுக பொதுக்குழு கூட்ட அரங்கம் திமுக பொதுக்குழு கூட்டம் திமுக பொதுக்குழு கூட்ட அரங்கம் திமுக பொதுக்குழு கூட்ட அரங்கம் திமுக பொதுக்குழு கூட்ட அரங்கம் திமுக பொதுக்குழு கூட்... மேலும் பார்க்க