சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு
தாட்கோ தொழில்முனைவோா் திட்டத்தில் பயன் பெற அழைப்பு
தாட்கோ தொழில்முனைவோா் திட்டத்தில் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவுத் திட்டம் திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் அல்லது திட்டத்தின் 35 விழுக்காடு தொகை எது குறைவோ மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் தவணைத் தொகையைத் தவறாமல் திரும்பச் செலுத்தும் பயனாளிகளுக்கு கூடுதலாக 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.
புதிரை வண்ணாா் சமூகத்தினா் இத் திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, ராஜாகாலனி, மாவட்ட ஆட்சியா் அலுவலகச்சாலை, திருச்சி- 620 00 என்ற முகவரியில் நேரிலோ, 0431-2463969 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.