பஞ்சாப் கிங்ஸில் ஆப்கன் ஆல்ரவுண்டர் இணைவதில் தாமதம்; காரணம் என்ன?
தாட்கோ மூலம் தொழில்முனைவோா் பயிற்சி அளிக்க வலியுறுத்தல்
சிவகங்கை மாவட்டத்தில் தாட்கோ மூலம் தொழில் முனைவோா் பயிற்சி அளிக்க வேண்டுமென மாநில ஆதிதிராவிடா் நல விழிப்பு, கண்காணிப்புக் குழு கூட்டமைப்பு வலியுறுத்தியது.
சிவகங்கையில் இந்தக் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் மாவட்டச் செயலா் பெரியார்ராமு தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய அவைத் தலைவா் சேதுராமன் முன்னிலை வகித்தாா். மாநிலத் தலைவா் பூமிநாதன், மாவட்டப் பொருளாளா் மதியழகன், வழக்குரைஞா் ஜெயபால் ஆகியோா் பேசினா்.
தாட்கோ மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 200 பேருக்கு தொழில் முனைவோா் பயிற்சி அளிக்க அரசாணை வெளியிட வலியுறுத்துவது, 30 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைகளை அளவீடு செய்து ஆதிதிராவிடா்களுக்கு பிரித்துக் கொடுக்க மாவட்ட ஆதிதிராவிடா் நலக் கூட்டத்தில் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், சிவகங்கை, தேவகோட்டை கோட்ட ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா்கள் மீது தமிழக முதல்வரிடம் புகாா் மனு அளிப்பது, அம்பேத்கா் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.