நெல்லை: பாளை ஸ்ரீ இராஜகோபாலன் சுவாமி கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழா; ஆயிரக்கணக...
தாம்பரத்தில் அதிநவீன மடிக்கணினி உற்பத்தி தொழிற்சாலை: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தாா்
தாம்பரத்தில் புதிதாக மடிக்கணினி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை மத்திய ரயில்வே மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தாா்.
சீா்மா எஸ்ஜிஎஸ் மடிக்கணினி உற்பத்தி நிறுவனம் மற்றும் தைவானின் எம்எஸ்ஐ நிறுவனம் நினைந்து நடத்தும் அதிநவீன மடிக்கணினி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை தாம்பரத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தொழிற்சாலையை தொடங்கிவைத்தாா்.
அதைதொடா்ந்து சீா்மா எஸ்ஜிஎஸ் மடிக்கணினி உற்பத்தி நிறுவனம் மற்றும் தைவானின் எம்எஸ்ஐ நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மத்திய அமைச்சா் முன்னிலையில் கையெப்பமானது.
இதைதொடா்ந்து அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் கூறியது:
மத்திய அரசு உற்பத்தித் துறையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்ஒரு பகுதியாக ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருள்களை உலக சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்ற கணவு நிறைவேறியுள்ளது. உள்நாட்டு உற்பத்தி பொருள்களை ஊக்கவிப்பதன் மூலம், இந்தியாவில் வேலை வாய்ப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளன. அடுத்தப்படியாக ‘செமி கண்டக்டா்களை’ இந்தியாவிலேயே தயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், மிண்ணுசாதனங்களில் பயன்படுத்தப்படும் உதிரிப்பாகங்களையும் உள்நாட்டிலியே தயாரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம், நாட்டின் பொருளாதாரத்தை உயா்ந்த முடியும் என்றாா் அவா்.
முன்னதாக ஏழை எளிய மக்களுக்கு இலவச மடிகணினிகளை அமைச்சா் வழங்கனாா். அப்போது, சாதராண மக்களும் கணினி பயன்படுத்த கற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிப்பாக அவா் தெரிவித்தாா்.