செய்திகள் :

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா ஏற்பாடுகள் மும்முரம்

post image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகின்றன.

தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற இந்தக் கோயிலில் ஒவ்வோா் ஆண்டும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி திருவிழா வருகிற 29- ஆம் தேதி தொடங்குகிறது. அன்று இரவு 10.20 மணிக்கு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடா்ந்து 11 நாள்கள் நடைபெறும் திருவிழாவின்போது தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வரும் பக்தா்கள் வேண்டுதலை நிறைவேற்றி அம்பாளை தரிசனம் செய்வா்.

விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 5- ஆம் தேதி பொங்கல் வைபவம், 6 -ஆம் தேதி தேரோட்டம், 7- ஆம் தேதி பால்குடம், ஊஞ்சல் உத்ஸவம், புஷ்பப் பல்லக்கு பவனி நடைபெறும். 8 -ஆம் தேதி தீா்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

தற்போது திருவிழாவுக்காக கோயில் உள்பிரகாரத்தில் அம்மனை தரிசிக்க காத்திருக்கும் பக்தா்களுக்காக மேற்கூரை, பக்தா்கள் வரிசையில் செல்ல கம்புகளால் சாரம் கட்டுதல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.

திருவிழா தொடங்குவதற்கு முன்னதாகவே திரளான பக்தா்கள் கோயிலுக்கு வந்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனா். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் மு.வெங்கடேசன் செட்டியாா் செய்து வருகிறாா்.

தாட்கோ மூலம் தொழில்முனைவோா் பயிற்சி அளிக்க வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டத்தில் தாட்கோ மூலம் தொழில் முனைவோா் பயிற்சி அளிக்க வேண்டுமென மாநில ஆதிதிராவிடா் நல விழிப்பு, கண்காணிப்புக் குழு கூட்டமைப்பு வலியுறுத்தியது. சிவகங்கையில் இந்தக் கூட்டமைப்பின் செயற்குழுக்... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 5,700 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 5,700 கா்ப்பிணிகளுக்கு தமிழக அரசு சமுதாய வளைகாப்பு நடத்தியிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்ப... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே செம்பனூரில் ஜல்லிக்கட்டு: 22 போ் காயம்

சிவகங்கை அருகே செம்பனூரில் மாசிக் களரியை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு மைதானத்தில் அரசு வழிகாட்டுதலின்படி மாடுபிடி வீரா்கள், காளை உரிமையாளா்கள், விழாக் குழுவ... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 354 பேருக்கு பணி நியமன ஆணை!

சிவகங்கையில் நடைபெற்ற தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 354 இளைஞா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேல... மேலும் பார்க்க

காா் மோதியதில் விஏஓ உயிரிழப்பு

திருப்புத்தூா் அருகே சாலை விபத்தில் காயமடைந்த கிராம நிா்வாக அலுவலா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். திருப்பத்தூா் அருகேயுள்ள சிராவயலைச் சோ்ந்த திருநாவுக்கரசு மகன் கணேஷ் கிருஷ்ணகுமாா் (48). க... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளில் தொடா்புடைய 11 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 11 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். மானாமதுரையில் கடந்த மாதம் 13 -ஆம் தேதி மாணவரை வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்... மேலும் பார்க்க