செய்திகள் :

தாயின் அறிவுரையால் சுழல் பந்துவீச்சாளராக மாறிய அஸ்வின்..!

post image

ஓய்வை அறிவித்த பிறகு அஸ்வின் யூடியூப் நேர்காணல் ஒன்றில் பங்கேற்று பேசியுள்ளார். அதில் தனது சுழல்பந்து வீச்சுகு காரணம் அவரது அம்மா எனக் கூறியுள்ளார்.

அதில் அஸ்வின் பேசியதாவது:

நானும் அப்பாவும் உழைக்க அம்மாதான் மூலக் காரணம். அவர் பெட்ரோல் மாதிரி. அவர் இல்லையென்றால் எங்களால் இவ்வளவு ஓடியிருக்க முடியாது. ஒருநாள் எனது போட்டியைப் பார்க்க வந்தார். நான் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தேன். அப்போது அம்மா, “என்னடா சும்மாவே இருக்க?” எனக் கேட்டார். “அவுட் ஆயிட்டேன் என்ன பண்றது?” என்றேன். அதற்கு அம்மா, “பௌலிங் போடு” என்றார். நான் “பாஸ்ட் பௌலிங் வராது” என்றேன். அதற்கு அம்மா, “சரி ஸ்பின் போடு” என்றார். அப்போது தொடங்கியதுதான் எனது சுழல் பந்துவீச்சுப் பயணம்.

பிறகு இன்னுமொரு முறை என்னால் சரியாக விளையாட முடியவில்லை, உங்களை ஏமாற்றிவிட்டேன் என அம்மாவின் மடியில் படுத்து அழுதேன். அப்போது அம்மா உன்னால் முடிந்தவரை முயற்சி செய். நான் உனக்காக பணம் சேமித்து வைக்கிறேன் எனக் கூறினார். எனது அம்மாவும் அப்பாவும் எனக்காக தியாகம் செய்தார்கள். அவர்கள் இல்லையென்றால் நான் இல்லை என அஸ்வின் கூறினார்.

38 வயதாகும் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரிஸ்பேன் டெஸ்ட்டின் 5ஆம் நாளில் தெரிவித்தார்.

இதுவரை டெஸ்ட்டில் மட்டும் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பெர்த் டெஸ்ட்டில் தேர்வு செய்யாததால் ஓய்வு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

முன்னாள் இந்திய வீரர்கள் சச்சின், கபில் தேவ் உள்பட பலரும் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் அஸ்வின் விளையாடவிருக்கிறார்.

ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆட்டத்தின் மிகப் பெரிய தருணம்: ஸ்டீவ் ஸ்மித்

யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனையாக இருக்கும் என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நேற்று (டி... மேலும் பார்க்க

மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரை முழுமையாக வென்றது இந்தியா!

மேற்கிந்திய தீவுகள் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரைக் கைப்பற்றியது. இந்தியா - மேற்கிந்திய அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வதோதரா சர்வதேச கிரிக்கெட் மைதானத்... மேலும் பார்க்க

ஃபார்மில் இல்லாமல் இருந்தேனா? ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டி!

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 26) மெல்போர்னில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில்... மேலும் பார்க்க

கிண்டலடித்த ஆஸி. ரசிகர்களை முறைத்த விராட் கோலி..! (விடியோ)

ஆஸி.க்கு எதிரான் டெஸ்ட்டில் ஆட்டமிழந்து வெளியேறிய கோலியை கிண்டலடித்த ஆஸி. ரசிகர்கள் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று ஆஸி. இளம் அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸை விராட் கோலி தேவையின்றி மோதியது பெர... மேலும் பார்க்க

கோலிக்கு அறிவுரை கூற ரிக்கி பாண்டிங்கிற்கு தகுதியில்லை..! இந்திய ரசிகர்கள் ஆவேஷம்!

சாம் கான்ஸ்டாஸுடனான விராட் கோலி மோதலில் கோலிக்கு அறிவுரை கூற ரிக்கி பாண்டிங்க்கு தகுதியில்லை என இந்திய ரசிகர்கள் பழைய விடியோக்களைப் பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். நேற்று ஆஸி. இளம் அறிமுக வ... மேலும் பார்க்க

விராட் கோலிக்கு ஐசிசி சிறப்பு சலுகை? கேள்வி எழுப்பும் முன்னாள் வீரர்கள்!

விராட் கோலிக்கு 20% அபராதம் போதுமானதில்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்திய, ஆஸி. மோதும் 4ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று (டிச.26) தொடங்கியது. இதில் ஆஸி. 474 க்கு ஆல் அவுட்டானது... மேலும் பார்க்க