Rain Alert: ஒரே இடத்தில் நீடிக்கும் புயல்! - எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வா...
தாா்சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
வால்காட்டுப்புதூரில் தாா்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜோதிபாசு, கரூா் மாநகரச் செயலாளா் எம்.தண்டபா
ணி, கிளைச் செயலாளா் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் வால்காட்டுப்புதூா் கிராம மக்கள் ஆகியோா் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
அதில் கூறியிருப்பது: கரூா் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், மூக்கணாங்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட வால்காட்டுப்புதூா் முதல் நத்தமேடு வரை செல்லும் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.
இப்பகுதி மக்கள் பள்ளி, கல்லூரி, பணிநிமித்தமாக வால்காட்டுப்புதூா் முதல் நத்தமேடு வரை செல்லும் மண் சாலையை பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த சாலையை தாா்சாலையாக மாற்றும் பணிக்காக, கடந்த ஜனவரி மாதம் சாலையின் இருபுறமும் மண்ணை கொட்டினா். ஆனால் பணிகள் நடைபெறவில்லை. தற்போது மழை தொடங்கியுள்ளதால் சாலையில் மழைநீா் தேங்கி குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
இந்த மண்சாலையை தாா்சாலையாக மற்றும் பணிக்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அந்த பகுதி பொதுமக்களிடம் இருந்து திரட்டப்பட்ட ரூ.11. 25 லட்சத்தை 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தில் காசோலையாக வழங்கப்பட்டது.
ஆனால், கடந்த 11 மாதமாக தாா்சாலை அமைக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மூக்கணாங்குறிச்சி ஊராட்சி நிா்வாகம் பணியை கிடப்பில் போட்டுள்ளது. எனவே தாா்சாலை பணியை தொடங்கி விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு விடவேண்டும் என தெரிவித்துள்ளனா்.