திங்கள்நகா் பகுதியில் 4 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
திங்கள்நகா் அருகே ஆலங்கோடு பகுதியிலுள்ள கடையிலிருந்து 4 கிலோ புகையிலைப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தக்கலை மதுவிலக்கு அமலாக்கத் துறை ஆய்வாளா் ஜோதிலட்சுமி, தக்கலை வட்டார உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் பிரவீன் ரகு ஆகியோா் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், போலீஸாா் ஆலங்கோடு, மைலோடு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, ஆலங்கோட்டில் பெண் ஒருவா் நடத்திவந்த பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட 4 கிலோ புகையிலைப் பொருள் பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடைக்கு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டனா்.