திடீரென நீக்கப்பட்ட இயக்குநர்; நடிகையுடனான பிரச்னை காரணமா? `வள்ளியின் வேலன்' தொடரில் என்ன நடக்கிறது?
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'வள்ளியின் வேலன்'. 'கலர்ஸ்' சேனலில் ஒளிபரப்பான 'திருமணம்' தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமான சித்து - ஸ்ரேயா ஜோடி திருமணத்துக்குப் பின் இணைந்து நடித்து வருகிறார்கள்.
இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரிக்காகவே இந்த சீரியல் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தத் தொடரில் நடித்து வந்த நடிகர் சாக்ஷி சிவா சில மாதங்களுக்குத் தொடரிலிருந்து வெளியேறினார். ஏதோவொரு பிரச்னையில்தான் அவர் வெளியேறியதாகச் சொல்லப்பட்டது.
தொடர்ந்து சில தினங்களுக்கு முன் சீரியலில் ஹீரோயினுக்கு அம்மாவாக நடித்து வரும் நடிகை நிமிஷாவுக்கு ஏதோ பிரச்னை என ஷூட்டிங்கே சில மணி நேரம் நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
இது தொடர்பாக சீரியல் யூனிட்டைச் சேர்ந்த சிலரிடம் நாம் பேசியபோது,
''சீரியலின் இயக்குநர் பிரதாப் ஆர்ட்டிஸ்டுகளிடம் நடந்துக்கிற விதம் ரொம்பவே மோசமா இருக்கு. ஹீரோ ஹீரோயின் தவிர மத்த எல்லா ஆர்ட்டிஸ்ட்டுகளையுமே அவர் மரியாதை இல்லாம நடத்துறார். ஒருமையில பேசறது, காரணமே இல்லாம திட்டறதுன்னு அவருடைய நடவடிக்கைகள் போயிட்டிருக்கு. ஒரு நடிகையுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட சர்ச்சை விவகாரம் சேனல் வரை போனது'' என்றனர்.

இந்நிலையில் தற்போது இயக்குநர் பிரதாப் 'வள்ளியின் வேலன்' தொடரிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். கடந்த வாரம் இந்த அதிரடி நடந்ததாகக் கூறுகிறார்கள். அவருக்குப் பதில் தற்போது ஜீவா என்பவர் தொடரை இயக்க வந்திருக்கிறாராம்.
சீரியல் தொடர்புடைய வேறு சிலரிடம் பேசியபோது, ``இவர் முன்னாடி ஒர்க் பண்ணின ஒரு சீரியல்லயும் நடிகைகூட பிரச்னை உண்டாகி, பாவம் அப்ப அந்த நடிகை தொடர்ல இருந்து வெளியே போனாங்க. எவ்வளவு நாள்தான் ஒருத்தர் தொடர்ந்து அக்கிரமங்களைச் செய்துகிட்டே இருக்க முடியும்? இப்ப இவருக்கு எதிராகத் திரும்பிடுச்சு" என்கிறார்கள் அவர்கள்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel