திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
Siragadikka Aasai: மீனாவால் பொசசிவ் ஆகும் ரோகிணி... ஆழமாகும் அருண்-சீதா நட்பு; அடுத்து என்ன?
சிறகடிக்க ஆசை சீரியலின் நேற்றைய எபிசோடில் பரசு தன் மகளின் திருமணத்திற்குப் பத்திரிக்கை வைக்க அண்ணாமலை வீட்டிற்கு வருகிறார். முத்து, மீனா, ரவி ஆகியோர் மகிழ்ச்சியுடன் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்க விஜயாவும் மனோஜும் அவமானப்படுத்தும்படி பேசுகின்றனர்.
கல்யாண வேலைகள் அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என முத்து சொல்ல, `ஓசிலியே எல்லாம் நடக்குது’ என்று பரசுவை அவமானப்படுத்தும்படி பேசுகிறார். அண்ணாமலை தன் நண்பரை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார். விஜயாவின் குணத்தை நன்கு அறிந்த பரசு பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பொறுத்துக் கொள்கிறார்.

ரவி-ஸ்ருதி ஒரே உணவகத்தில் வேலை பார்ப்பது சில பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. ஸ்ருதியை ரவி வேண்டுமென்றே வேலை வாங்குகிறார். ஸ்ருதி கடுப்பாகி ரவியிடம் வாக்குவாதம் செய்கிறார். அவர்களின் வாக்குவாதமும் பார்க்க ரசிக்கும்படிதான் உள்ளது. எந்த வித டாக்ஸிக் வார்த்தைகளும் எண்ணங்களும் இன்றி தம்பதி வாக்குவாதம் செய்வது க்யூட்!
வித்யா மீனாவைச் சந்தித்து தன் காதலை வளர்க்க ஐடியா கேட்கிறார். முருகனின் மொபைலில் பெண்களின் காண்டாக்ட் இல்லை, அவர் ரொம்ப நல்லவரா இருக்கார் என்று மீனாவிடம் சொல்கிறார். மீனாவின் வீட்டிற்கே முருகன் சென்று பெண் கேட்ட விஷயமெல்லாம் தெரிந்தால் வித்யா எப்படி ரியாக்ட் செய்வார் என்பது ஆவலைத் தூண்டுகிறது.
மீனாவிடம் வித்யா சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருப்பதை மறைந்திருந்து பார்க்கும் ரோகிணி கடுப்பாகிறார்.

மீனா கிளம்பியதும் வித்யாவிடம் சென்று, 'மீனாவிடம் அப்படி என்ன பேச்சு?' என்று கடிந்துக் கொள்கிறார். ரோகிணி நெருங்கிய தோழியாக இருந்தாலும் தன் காதல் விவகாரத்தை அவரிடம் சொல்லாமல் வித்யா தவிர்ப்பது ஏன் என்பது கேள்விக்குறி.
ரோகிணி மீனாவிடம் நெருங்கிப் பழக வேண்டாம் என வித்யாவை எச்சரிக்கிறார். நான் தான் உன் பெஸ்ட் பிரண்ட் என்று குழந்தை போல கோவப்படுகிறார் ரோகிணி.
முத்து டிராஃபிக் போலீஸ் அருணை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட அந்த வீடியோ வைரலாகிறது. ஸ்டிரிக்ட் ஆஃபிசரான அருண் ஹெல்மெட் அணியாமல் போன் பேசிக் கொண்டே பைக்கில் வந்த விஷயம் மேலதிகாரிகளுக்குத் தெரிந்து அவரை மூன்று நாட்கள் பணியிடை நீக்கம் செய்கின்றனர்.
முத்து மீது செம்ம கடுப்பில் இருக்கும் அருண் கோவமாக வீட்டிற்குக் கிளம்புகிறார். அருணின் வீட்டிற்குச் சீதா வருகிறார்.

சீதா அருணின் அம்மாவிடம் நலம் விசாரிக்கிறார். அருண் சீக்கிரமே பணியில் இருந்து வந்ததை அறிந்த சீதா அவரை அழைத்து பேசுகிறார். சீதாவிடம் அருண் தன் பணியிடத்தில் பிரச்னை ஏற்பட்டுவிட்டது என்கிறார். அதோடு நேற்றைய எபிசோட் முடிகிறது.
நாளுக்கு நாள் சீதா - அருணின் நட்பு ஆழமாகிறது. அருண் நேர்மையான அதிகாரி என்பது போல் காட்டப்படுகிறது. ஆனால் வேண்டுமென்றே அவரைச் சிக்க வைத்திருக்கும் முத்துவால் அவர் எப்படி மாறுவார்? சீதாவுடனான நட்பு காதலாகுமா? ரோகிணியைப் பற்றிய உண்மைகளைக் கண்டறிய முத்துவுக்கு உதவுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play