Kayal Serial: ஒரு வருடத்திற்கு மேல் கர்ப்பமாக இருக்கும் தேவி; வளைகாப்பு குறித்து ரசிகர்கள் கேள்வி
கயல் சீரியலில் தேவிக்கு வளைகாப்பு நடத்தக் கயல் ஏற்பாடு செய்கிறார். ஆனால் தேவியின் கணவர் தாயின் பேச்சைக் கேட்டு வளைகாப்புக்கு வர மறுக்கிறார்.
கயல் தன் தங்கை தேவியின் கணவர் விக்னேஷை எப்படியாவது சமாதானப்படுத்தி இந்த வளைகாப்பை நடத்திவிடலாம் என்ற நம்பிக்கையில் ஏற்பாடு செய்கிறார். வளைகாப்புக்கு வரும் உறவினர்கள் அனைவரும் மாப்பிள்ளை வீட்டிலிருந்து யாரும் வரவில்லையா என்று கேட்கின்றனர். பதில் சொல்ல முடியாமல் எழில் விழிக்க, கயல் நம்பிக்கை கொடுக்கிறார்.

விக்னேஷ்-தேவி காதல் திருமணம் செய்தவர்கள் என்பதால் அவ்வளவு சீக்கிரத்தில் தேவியை விக்னேஷ் வெறுத்துவிட மாட்டார் எனக் கயல் நம்புவதாக எழிலிடம் சொல்கிறார்.
கயல் எதிர்பார்த்தபடியே வளைகாப்புக்குக் கண்டிப்பாகப் போக வேண்டும் என விக்னேஷ் ஆசைப்படுகிறார். ஆனால், அம்மா (வேதவள்ளி) பேச்சை மீறி மனைவிக்காக முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறார். அந்த சமயத்தில் கயலும் எழிலும் அவரிடம் வந்து தேவிக்காகப் பேசுகின்றனர். விக்னேஷ் மனமிறங்கி தன் மனைவியின் வளைகாப்புக்குச் செல்ல நினைக்கிறார். ஆனால் வேதவள்ளி தன் மகனைப் போகவிடாமல் தடுக்கத் திட்டமிடுகிறார். குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்து கொண்டு வருவது போல் ப்ரோமோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த ப்ரோமோவுக்குக் கீழ் ரசிகர்கள் பலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். கயலின் தங்கையான தேவி பல எபிசோடுகளாக கர்ப்பமாக இருப்பது போல் சீரியலில் காட்டப்படுகிறது என கமெண்ட் செய்து வருகின்றனர். ஏறக்குறைய ஒன்றரை வருடங்களுக்கும் மேலாகத் தேவி கதாபாத்திரம் கர்ப்பமாக இருப்பது போல் காட்டப்படுவதால் எப்போதுதான் குழந்தை பிறக்கும் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பல பிரச்னைகளைத் தாண்டி நடந்த கயலின் திருமண நிகழ்வு ஒரு மாதத்திற்கும் மேலாக ஒளிப்பரப்பட்டது. அதேபோல் தேவி வளைகாப்பு நிகழ்வையும் இழுத்தடிக்க வேண்டாம் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play