Siragadikka aasai : வீண் வம்பு, ஈகோ யுத்தம் - அருணை வீடியோ எடுத்த முத்து!
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவுக்கு எதிராக அருண் கதாபாத்திரமும் மீனாவுக்கு எதிராக சிந்தாமணியும் அறிமுகப்படுத்தப்பட்டனர். சிந்தாமணி விஜயாவின் நடனப்பள்ளியில் இணைந்து மீனாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். மற்றொருபுறம் அருணுக்கு சீதாவுடன் நட்பு ஏற்படுகிறது.
இதனிடையே ரோகிணியின் தோழி வித்யா முருகனை காதலிக்கிறார். முருகன் முத்துவின் நண்பரின் தம்பி என்பது வித்யாவுக்குத் தெரியாது. அவர்களின் காதல் டிராக்கும் கதையில் ஸ்வாரஸ்யத்தை கூட்டியுள்ளது.

க்ருஷ் சென்னையில் தான் இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்ட முத்து, மீனாவிடம் எப்படியாவது க்ருஷின் பாட்டியை சமாதானப்படுத்த வேண்டும் என்று சொல்வதை கேட்டு ரோகிணி அதிர்ச்சியாகிறார். ஏற்கனவே மொபைல் விஷயத்தில் முத்துவின் சந்தேக வலையில் இருக்கும் ரோகிணிக்கு இது பெரிய தலைவலியை ஏற்படுத்துகிறது.
சிந்தாமணி திட்டமிட்டபடி விஜயாவால் மீனாவின் வேலையில் தடங்கலை ஏற்படுத்த முடியவில்லை என்பதால் அவர் விஜயாவிடம் அலட்சியமாக நடந்துக் கொள்கிறார். விஜயாவால் மீனாவை கட்டுப்படுத்த முடியவில்லை என சொல்லி வெறுப்பேற்றுகிறார். அவர் வேண்டுமென்றே ஏற்றிவிடுகிறார் என்பது பார்வதிக்கு புரிகிறது. ஆனால் விஜயாவுக்கு புரியாமல் மீனாவை வேலை செய்ய விடாமல் தடுப்பேன் என சபதம் எடுக்கிறார்.

அண்ணாமலையின் நண்பர் பரசுவின் மகளை தேடிக் கண்டுபிடிக்கும் முத்து, திருமணம் செய்து வைக்கவும் பரசுவிடம் பேசி சம்மதிக்க வைக்கிறார். பரசுவின் மகள் காதலிக்கும் நபரின் சொந்த தாய் மாமா தான் ரோகிணிக்காக மலேசியா மாமாவாக நடித்த மணி. இந்த திருமணத்தில் மலேசியா மாமா முத்துவிடம் சிக்கிக் கொள்வாரா என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரியவரும்.
நேற்றைய எபிசோட் முடிவில் வெளியான ப்ரோமோவில் அருணை சிக்க வைக்க முத்து முயற்சி செய்கிறார். அருண் ஏதோ அவசர வேலையாக பதற்றத்துடன் போன் பேசிக் கொண்டே ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டுகிறார். பேசிக் கொண்டே நோ பார்க்கிங்கில் வண்டியை விடுகிறார். இதனை கவனித்த முத்து அவருக்கு பாடம் புகட்ட நினைத்து அருண் ஹெல்மெட் இல்லாமல் போன் பேசிக் கொண்டே பைக் ஓட்டி வந்ததை வீடியோ எடுக்கிறார். வீடியோவை வைத்து அருணை என்ன செய்யப் போகிறார்? அருண் வேலையில் பிரச்னை ஏற்படுமா என்பது அடுத்த எபிசோடில் தெரியும்.